இரவில் ஆடையின்றி சுற்றிய கணவன்-மனைவி… வினோத நடவடிக்கையால் அதிர்ந்த கிராமம்!
இரவில் ஆடையின்றி சுற்றிய கணவன்-மனைவி… வினோத நடவடிக்கையால் அதிர்ந்த கிராமம்!
திருப்பத்தூர் அருகே இரவு நேரத்தில் தம்பதி ஒருவர் வினோதமான முறையில் ஊரைச் சுற்றி வந்ததாக கூறப்படும் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கரம்பூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த 56 வயதான பழனி என்பவரும், அவரது 48 வயது மனைவி தீபாவும் கடந்த சில நாட்களாக வீட்டில் வித்தியாசமான பூஜைகளை செய்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இரவு நேரத்தில் இருவரும் ஆடையின்றி சாலையில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, தம்பதியிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது, “தன் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்” என்று பழனி கூறியதாகவும், தங்களை எதிர்ப்பவர்களுக்கு தீங்கு நேரும் வகையில் சாபம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 2 மனைவிகள்… 19 வயது கல்லூரி மாணவியுடன் தப்பியோட்டம்? – சிக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்!
மேலும், தங்களுக்கு சாமி வந்திருப்பது போன்ற வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுமாறும் கிராம மக்களிடம் அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தம்பதியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியின் இந்த நடவடிக்கைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.