×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

 2 மனைவிகள்… 19 வயது கல்லூரி மாணவியுடன் தப்பியோட்டம்? – சிக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்!

 2 மனைவிகள்… 19 வயது கல்லூரி மாணவியுடன் தப்பியோட்டம்? – சிக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்!

Advertisement

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்ற நிலையில், 19 வயது கல்லூரி மாணவியை, தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் காதலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தோடு அருகே அமராவதி நகரைச் சேர்ந்த 29 வயதான மணிகண்டன், தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே தஸ்மின் என்பவருடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மலர் என்ற பெண்ணையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, காளிங்கராயன்பாளையத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மணிகண்டன் பவானி–ஈரோடு வழித்தடத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றியபோது, அந்தப் பேருந்தில் தினமும் கல்லூரிக்குச் சென்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவி காவியாவுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பள்ளி உணவில் விஷம் கலந்ததால் அதிர்ச்சி.. 51 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆசிரியர்!

இதில், மணிகண்டனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றிருப்பது தெரிந்திருந்தும், மாணவி அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்குச் சென்ற காவியா வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மணிகண்டனும், மாணவியும் கண்டுபிடிக்கப்பிடுத்துள்ளறர். இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த தகவல் அறிந்த மணிகண்டனின் இரண்டு மனைவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பவானி காவல் நிலையம் முன்பு திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதில், மணிகண்டன் சமூக வலைதளங்களில் பைக் ஸ்டண்ட் தொடர்பான ரீல்ஸ் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 2 மனைவிகள் இருந்தும் தற்போது இளம்பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பட்டு தலைமறைவாகிய அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்காதலன் வீட்டு முன்பு கள்ளக்காதலி கொலை.. அரங்கேறிய வெறிச்செயல்.. பதறிய பொதுமக்கள்.. ஈரோட்டில் சோகம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #Sithodu #Love #illegal affairs
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story