×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னை காதலிக்க மாட்டியா? நீ உயிரோட இருக்க வேண்டாம்.. சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்.! 

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி உயிருக்கு போராடி வருகிறார். 

Advertisement

காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த மாணவிக்கு கத்திகுத்து விழுந்தது. 

பள்ளி மாணவி: 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சி. முட்லூர் பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன் (வயது 28). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரின் கிராமத்துக்கு அருகில் இருக்கும் மற்றொரு கிராமத்தில், 16 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். 

இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!

காதல் தொல்லை: 

இவர் அங்குள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, மாணவி பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் மாணவியை பின்தொடர்ந்து செல்லும் ஐயப்பன், காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

படிப்பு முக்கியம்: 

தனக்கு படிப்பு முக்கியம் என மாணவி தெரிவித்தும் காதல் தொல்லை ஓயவில்லை. இரன்டு ஆண்டுகளாக நீடித்து வந்த தொல்லை தீராத நிலையில், இளைஞர் கொலை செய்வதாக மிரட்டி இருக்கிறார். 

அத்துமீறல்: 

இதனிடையே, நேற்று மாணவி வீட்டில் தனியாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட ஐயப்பன், காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். மாணவி மறுப்பு தெரிவிக்கவே, கத்தியால் மாணவியின் கழுத்து, முதுகில் குத்தி இருக்கிறார். 

புகார்: 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஐயப்பனை தேடி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: "ஆசிட் வீசிடுவேன்" காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்..! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #Chidambaram #11th Class Student #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story