ஏர் பிரையரில் எண்ணெய் உணவுகளை தயாரிக்கலாமா? இந்த டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க மக்களே.. அப்புறம் வருத்தப்படுறீங்க.!
Air Fryer Mistakes to Avoid: ஏர் பிரேயர் முறையிலும் எண்ணெயில் உணவை பொறிக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எண்ணெய் அதிகம் பயன்படுத்த கூடாது என்பதாலேயே ஏர் பிரேயர் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதிலும் எண்ணெய் ஊற்றி பொறித்து சாப்பிடுவது தேவையில்லாதது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
போர் பதற்றம்:
Oil-Fried Foods in an Air Fryer: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சமையல் எரிவாயு, கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கி இருக்கிறது. இதனால் சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கு மாற்றாக மக்கள் தற்போது மாற்று வழிகளை தேடி வருகின்றனர். ஒருசில வீடுகளில் எலக்ட்ரிக் ஸ்டவ், மைக்ரோவேவ் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏர் ப்ரையர்களும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்களுக்கு ஷாக்.. நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்வு.. உணவுகளின் விலையும் உயரும் அபாயம்.!
மொறுமொறு உணவுகள்:
ஆனால், ஏர் பிரேயர் வைத்து சமைப்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. இது நல்லதா? கெட்டதா? என பல கேள்விகள் இருக்கின்றன. மேலும், உடல்நலனில் அக்கறை கொண்டவர்கள், எண்ணெய் இல்லாமல் மொறுமொறுப்பான உணவை விரும்புவார்கள் ஏர் பிரையரை தேடுகிறார்கள்.
எண்ணெய் வேண்டாம்:
ஸ்னாக்ஸ் போன்ற மொறுமொறுப்பான உணவுகளை தயாரிக்க ஏர் பிரேயர் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இதனை சிலிண்டருக்கு முழு மாற்று என நினைக்க கூடாது. எண்ணெயில் பொறித்து சாப்பிட விரும்புவோர், ஏர் பிரையரில் சமைக்கும் முன் அதிக எண்ணெயை தடவுகின்றனர். இவ்வாறானவற்றை ஏர் பிரையரில் செய்வது ஆபத்தானது. உடலுக்கு ஆரோக்கியம் இல்லாதது. இது கிட்டத்தட்ட எண்ணெய் ஊற்றி சாதாரண முறையில் பொரிப்பதற்கு சமம் ஆகும்.
உண்மையில் உடலை ஆரோக்கியத்துடனும் எண்ணெய் ஊற்றி சாப்பிட வேண்டும் அல்லது எண்ணெயில் பொரித்த உணவை சாப்பிட வேண்டும் என நினைப்போர், தரமான எண்ணெய் வாங்கி குறைந்த அளவு பயன்படுத்துவது நல்லது.
இதையும் படிங்க: இல்லத்தரசிகள் தலையில் விழப்போகும் இடி.. வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வா?