இல்லத்தரசிகள் தலையில் விழப்போகும் இடி.. வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வா?
பெட்ரோல், டீசலைத்தொடர்ந்து வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 முதல் ரூ.100 வரை உயரலாம்.
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்:
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக, ஈரான் - இஸ்ரேல் & அமெரிக்கா இடையே போர் நிலவி வருகிறது. ஈரான் சவுதியின் ஹார்மோஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் எண்ணெய் வணிக கப்பலை தாக்கி அழிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால், அவ்வழியாக உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த எண்ணெய் விநியோகம் முடங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: மாதத்தின் முதல் நாள்.. பெட்ரோல், டீசல் விலை., சிலிண்டர் விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!
விலை உயர்வு:
இதனால் உலகளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என எரிவாயுவின் விலை உயர்ந்து வருகிறது. இது பிற அத்தியாவசிய பொருட்களின் மீதான விலையை மறைமுகமாக உயர்த்தி இருக்கிறது. சமீபத்தில் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டு இருந்தது. வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலையும் மறைமுகமாக உயர்ந்து இருக்கிறது.
சமையல் எரிவாயு:
இந்நிலையில், வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதலாக உயரலாம் என எதிர்பாக்கப்படுகிறது. கடந்த மார்ச் 07ம் தேதி வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்தால் ரூ.1000 வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக கியாஸ் சிலிண்டர் மே 01ம் தேதி ரூ.998 உயர்த்தப்பட்டு ரூ.3000 ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் திட்டப்படி இன்னும் ஒருசில நாட்களில் கியாஸ் சிலிண்டர் விலை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை இன்று... மாதத்தின் முதல் தேதியில் வந்தது முக்கிய செய்தி. இறங்கிய இடி..!