×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறைக்குள் இருந்த ரவுடியுடன் வீடியோ காலில்.... பெண் போலீஸ் செய்த அதிர்ச்சி காரியம! பகீர் பின்னணி..!!!

பெங்களூருவில் ரவுடியுடன் வீடியோ காலில் பேசிய பெண் இன்ஸ்பெக்டர் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், லஞ்ச புகாரும் விசாரணையும் தீவிரம்

Advertisement

பெங்களூருவில் பெண் காவல் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரவுடியுடன் வீடியோ காலில் பேசியபோது பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஆபாச காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவை ரவுடி சாய்குமார் தற்போது வெளியிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இருதரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறையில் இருந்த ரவுடியுடன் வீடியோ கால்

விசாரணையில், அந்தப் பெண் இன்ஸ்பெக்டர் கர்நாடக மாநில தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருபவர் என்பதும், முன்பு ஹிண்டல்கா மத்திய சிறையில் பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரியவந்துள்ளது. அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த குனிகல் பகுதியைச் சேர்ந்த ரவுடி சாய்குமாருடன் அவர் வீடியோ காலில் பேசியதாக கூறப்படுகிறது. அந்த உரையாடலின்போதே தனிப்பட்ட காட்சிகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இப்படி ஒரு ட்விஸ்டை யாரும் எதிர்பார்கல... வெறும் 1 பைசா தான்...! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கான டெண்டரை அப்படியே அள்ளிய ஜாய் ஆலுக்காஸ்!!!

வீடியோவை வெளியிட்டதாக ரவுடி மீது புகார்

கடந்த 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, அந்த இன்ஸ்பெக்டர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் சாய்குமார் மீது புகார் அளித்துள்ளார். தனிப்பட்ட வீடியோவை அனுமதியின்றி வெளியிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதே நேரத்தில், சாய்குமாரும் இன்ஸ்பெக்டர் மீது எதிர் புகார் அளித்துள்ளார். சிறைக்குள் செல்போன், மது உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதற்காக தன்னிடம் அவர் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தாம் லஞ்சமாக வழங்கியதாக கூறப்படும் அதே செல்போனில்தான் வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துறைரீதியான விசாரணை தீவிரம்

தற்போது அந்தப் பெண் இன்ஸ்பெக்டர் விடுமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, லஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீது துறைரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமிலும் மற்றொரு வீடியோ வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பெலகாவி சி.இ.என் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் ரவுடி இடையிலான தொடர்பு, லஞ்சக் குற்றச்சாட்டு, வீடியோ வெளியான விதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் கர்நாடக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: மைத்துனர் மனைவியுடன் உல்லாசம்.. நடுரோட்டில் நடந்த கொடூர கொலை சம்பவம்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பெண் இன்ஸ்பெக்டர் #Bengaluru Police #ரவுடி சாய்குமார் #வீடியோ கால் #லஞ்ச புகார்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story