×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி ஒரு ட்விஸ்டை யாரும் எதிர்பார்கல... வெறும் 1 பைசா தான்...! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கான டெண்டரை அப்படியே அள்ளிய ஜாய் ஆலுக்காஸ்!!!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் வென்றது.

Advertisement

 

விஜய் அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கான டெண்டரை முன்னணி நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் பெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

ஆண்டுக்கு ரூ.755 கோடி ஒதுக்கீடு

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு உதவுவதுடன், அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.755 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 4.41 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டபுள் சர்ப்ரைஸ்.... மகளிருக்கு ரூ.2,500... இளைஞர்களுக்கு ரூ.4,000! பட்ஜெட்டில் மாஸ் காட்டப்போகும் CM விஜய்..!!!

டெண்டரில் நிர்ணயிக்கப்பட்ட முக்கிய நிபந்தனை

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட டெண்டரில் தங்கத்தின் விலை தொடர்பாக ஒரு முக்கிய விதிமுறை பின்பற்றப்பட்டது. 22 கேரட் தங்கத்தின் அடிப்படை சந்தை விலை அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டது. எனவே, மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி, ஹால்மார்க் முத்திரை, பாதுகாப்பான பேக்கிங் மற்றும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவுக்கான தொகையை மட்டுமே நிறுவனங்கள் ஏலத்தில் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஒரு மோதிரத்திற்கு ஒரு பைசா கேட்ட ஜாய் ஆலுக்காஸ்

இந்த ஏலத்தில் பல முன்னணி நகை நிறுவனங்கள் ஒரு மோதிரத்திற்கு ரூ.400 முதல் ரூ.15,000 வரை கூடுதல் கட்டணம் கோரியதாக கூறப்படுகிறது. ஆனால், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் அனைத்து கூடுதல் சேவைகளையும் சேர்த்து ஒரு மோதிரத்திற்கு வெறும் ஒரு பைசா மட்டுமே கட்டணமாக கேட்டுள்ளது. பேக்கிங், செய்கூலி மற்றும் விநியோகச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அந்த நிறுவனம், மிகக் குறைந்த தொகையை குறிப்பிட்டு டெண்டரில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது குறைந்த விலையை கோரிய ஜிஆர்டி நிறுவனம் ஒரு மோதிரத்திற்கு ரூ.410-க்கும் அதிகமாக கேட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, ஒரு பைசா என்ற டெண்டர் தொகை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தை வெற்றியாளராக மாற்றியுள்ளது. இதையடுத்து, செப்டம்பர் 15 முதல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

 

இதையும் படிங்க: கஜானாவின் மொத்த லிஸ்ட்டை புட்டு புட்டு வைக்க போகும் CM விஜய்! துறை வாரியாக 3 மணி நேர ஆலோசனை.. ஆகஸ்ட் 5-இல் அதிரப்போகும் தமிழகம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தாய்மாமன் தங்க மோதிரம் #Vijay Government #ஜாய் ஆலுக்காஸ் #Gold Ring Scheme #தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story