கஜானாவின் மொத்த லிஸ்ட்டை புட்டு புட்டு வைக்க போகும் CM விஜய்! துறை வாரியாக 3 மணி நேர ஆலோசனை.. ஆகஸ்ட் 5-இல் அதிரப்போகும் தமிழகம்..!!!
ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை முன்னிட்டு, நிதி சீர்திருத்தம், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பொறுப்பான நிதி மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தவெக அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசின் அறிமுக பட்ஜெட் என்பதால், பொதுமக்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
துறை வாரியாக தீவிர ஆலோசனை
புதிய அரசின் செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் திட்டமிட்ட பட்ஜெட்டை தயாரிக்க முதலமைச்சர் விஜய், நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு துறை அமைச்சர்களுடனும் 3 மணி நேர ஆலோசனைகள் நடத்தப்பட்டு, துறைகளின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இனிதான் ஆட்டமே இருக்கு.... ஜூலை 2 முதல் துறைவாரியாக இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்..! பட்ஜெட் தயாரிப்பில் அதிரடி..!!!
கடன் சுமையை கட்டுப்படுத்தும் இலக்கு
முந்தைய ஆட்சிக் காலங்களில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை புதிய அரசுக்கு முக்கிய சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மாநிலத்தின் நிதி நிலையை மேலும் பாதிக்காமல், பொறுப்பான நிதி மேலாண்மையை பின்பற்றும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் நலனும் நிதி ஒழுங்கும் கவனம்
மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, தேவையற்ற செலவுகள் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், மாநில கஜானாவின் தற்போதைய நிதி நிலவரத்தை வெளிப்படையாக விளக்கிய பின்னரே பட்ஜெட் உரையை தொடங்கும் திட்டம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி மேலாண்மையை வலுப்படுத்த நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நீண்டகால வளர்ச்சியை இலக்காகக் கொண்ட பல்வேறு அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது வெளியாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனினும், இத்தகவல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் பட்ஜெட் தாக்கலின்போது வெளியாகும்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட்...! ஆகஸ்ட் 5 இல் தவெக நிதிநிலை அறிக்கை... என்னென்ன ஸ்பெஷல்? உச்சக்கட்ட எதிர்பார்பில்...!!!