மூதாட்டிக்கு நடந்த கொடூரம்.. பழனியில் மக்கள் அச்சம்.. கொடூர கொலை.!
Palani News: நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பழனி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மூதாட்டி:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரம் பகுதியில் வசித்து வருபவர் ராமுத்தாய் (வயது 83). இவரின் கணவர் நடராஜன் இறந்துவிட்டார். தம்பதிகளுக்கு 3 மகள்கள் இருக்கும் நிலையில், திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஆபாச வார்த்தைகளுடன் 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. 48 வயது ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!
தனியாக இருக்கிறார்:
இதனால் மூதாட்டி ராமுத்தாய் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை நேரத்தில் அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. வீட்டின் கதவுகளும் திறந்திருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ராமுத்தாய் பேச்சு-மூச்சின்றி இருந்துள்ளார்.
விசாரணை:
இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் பழனி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நேரில் வந்த அதிகாரிகள், நடத்திய விசாரணையில் ராமுத்தாயின் 7 சவரன் தங்க நகைகள் மாயமாகியது உறுதியானது.
கொலை:
அவரின் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததால், நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!