ஊரையே காலி செய்த 7 கிராமங்கள்?… 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வினோத வழக்கம்!
ஊரையே காலி செய்த 7 கிராமங்கள்?… 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வினோத வழக்கம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 7 கிராமங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்ற சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
சுமார் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் குடும்பத்துடன் திருப்பதி செல்வது வழக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்குப்பம், பாப்பானூர், துறையூர், ஆவல்நாயக்கனப்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளது.
இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தனித்தனியாகவோ, குடும்பமாகவோ திருமலை திருப்பதிக்கு செல்வதில்லை என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைவரும் ஒன்றாக திருப்பதி செல்வது வழக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் திருப்பதி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: இரவில் ஆடையின்றி சுற்றிய கணவன்-மனைவி… வினோத நடவடிக்கையால் அதிர்ந்த கிராமம்!
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு சாமி அருள் வந்து திருப்பதி செல்ல வேண்டும் என கூறியதாகவும், அதனைத் தொடர்ந்து 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 7 பேருந்துகள் மற்றும் கார்கள் மூலம் 700-க்கும் மேற்பட்டோர் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
திருப்பதி பயணத்துக்கு முன்னதாக கிராமங்களில் மேளதாளம் முழங்க, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி முழக்கத்துடன் மக்கள் புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி செல்வதற்காக ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் துணி கட்டப்பட்ட உண்டியல் வைத்து, சனிக்கிழமைகளில் அதில் காணிக்கை செலுத்தி பணம் சேமிப்பது வழக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த சேமிப்பு மற்றும் காணிக்கைத் தொகையுடன் தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் திருப்பதிக்கு புறப்பட்டுள்ளனர். இந்த வித்தியாசமான வழக்கம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 2 மனைவிகள்… 19 வயது கல்லூரி மாணவியுடன் தப்பியோட்டம்? – சிக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்!