×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கஞ்சா போதை அட்டகாசம்.. புகார் அளித்ததால் இளைஞர் குத்திக்கொலை.. ராஜபாளையத்தில் கொடூரம்.! 

Rajapalayam News: போதைக்கும்பலின் அட்டூழியம் குறித்து புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்டார்.

Advertisement

போதைக்கும்பலுக்கு எதிராக புகார் அளிக்கச்சென்ற இளைஞருடன் வந்த நபர் கொலை செய்யப்பட்ட சோகம் ராஜபாளையத்தை அதிர வைத்துள்ளது. 

கஞ்சா போதை: 

Virudhunagar News: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், தளவாய்புரம் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ். இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். காளிதாசன் மகன் மணிகண்டன் (வயது 22). தந்தையுடன் வியாபாரத்தை கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில், மணிகண்டனின் அத்தை முத்துமாரி வீட்டின் முன் சிலர் கஞ்சா புகைத்துவிட்டு அவதூறு பேசி தகராறு செய்துள்ளனர். 

இதையும் படிங்க: ஆபாச வார்த்தைகளுடன் 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. 48 வயது ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.! 

வாக்குவாதம்: 

இந்த விஷயத்தை கண்டித்த முத்துமாரிக்கும், போதை கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முத்துமாரி சென்றுள்ளார். அங்கிருந்த பெண் ஆய்வாளர், காலையில் வந்து புகார் கொடுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பியதாக தெரியவருகிறது. 

அராஜகம்: 

இந்த தகவலை அறிந்த போதைக்கும்பல் பாண்டி, இளையராஜா, தங்கையா, ஈஸ்வரன், மாணிக்கம் ஆகியோர் அதிகாலை 3 மணியளவில் முத்துமாரியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவரது வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து அராஜகம் செய்துள்ளனர். இதுதொடர்பாக உடனடியாக தளவாய்புரம் காவல் துறையினருக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரிகள்: 

பின் நேரில் வந்த அதிகாரிகள் இருதரப்பையும் சமாதானம் செய்து, புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளது. பின் நேற்று காலையில் காவல் நிலையம் சென்ற மணிகண்டன், முத்துமாரி ஆகியோரை மதியம் வரை காத்திருக்க வைத்து இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்வதாகவும், நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுமாறும் காவல் ஆய்வாளர் கூறி இருக்கிறார். 

கொலை: 

இதனால் ஆத்திரமடைந்த போதை கும்பலைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 35), மாணிக்கம் (வயது 26) ஆகியோர் நேற்று மாலை நேரத்தில் மணிகண்டனின் கடைக்குள் புகுந்து ஆரை கொலை செய்தனர். மேலும், கடையில் இருந்தவரை வெளியே இழுத்து வந்து மக்கள் முன்பு கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தளவாய்புரம் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Virudhunagar #Rajapalayam #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story