×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தவெக நிர்வாகி பாரில் பயங்கரம்.. உல்லாசத்துக்கு மறுத்த 18 வயது பெண் துள்ளத்துடிக்க கொலை.. சென்னையில் துணிகரம்.!

Chennai Crime News: உல்லாசத்துக்கு மறுப்பு தெரிவித்த பெண் கொலை செய்யப்பட்டார்.

Advertisement

சென்னையில் நடந்த பயங்கர கொலை சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

தவெக நிர்வாகி பார்:

சென்னனை கோயம்பேடு மேம்பாலம் அருகில் கெடவே எப்எப்3 பெயரில் தனியார் ஓட்டல் செயல்படுகிறது. இந்த ஓட்டலின் உரிமையாளர் டிராவல்ஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார். தவெக நிர்வாகி என கூறப்படுகிறது. ஓட்டலில் டிஜே இசையுடன் மதுபான பாரும் இருக்கிறது. இங்கு இரவு நேரங்களில் வசதியான இளைஞர்கள், காதல் ஜோடிகள் வந்து செல்வார்கள். அப்படி இளம்பெண்களுடன் போதையில் நடனமாடும்போது பாலியல் தொல்லை தொடர்பான பிரச்சனைகளும் எழுகின்றன. இந்த பிரச்சனையை தடுக்க பௌன்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: வீட்டுக்குள் புகுந்து 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. சென்னையில் பேரதிர்ச்சி.!

தோழிகள்:

இலங்கையில் வசித்து வந்த நகுலேஸ்வரன் இறுதிக்கட்ட போரின்போது தமிழகம் வந்தார். தற்போது விழுப்புரம் மாவட்டம் அனிச்சாங்குப்பம் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருக்கிறார். கூலி வேலை செய்து வரும் இவருக்கு யான்சி என்ற 18 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் கடலூரில் செயல்படும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்றுவிட்டு, சென்னையில் செயல்படும் கல்லூரியில் மேல்படிப்பு படிக்க விண்ணப்பித்து இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் பிரபலம் எனவும் கூறப்படுகிறது. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் நண்பர்களை நேரில் சந்திப்பது வழக்கம். மேலும், புதுச்சேரியில் இருக்கும் இன்ஸ்டா நண்பர்களுடன் இரவு விருந்து, ரிஸார்ட்டுக்கும் சென்று வந்துள்ளார்.

மதுபோதை பழக்கம்:

அந்த வகையில், இவர் கடலூரில் படித்தபோது, திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியில் வசித்து வந்த தாபிதாவுடன் பழகி இருக்கிறார். தாபிதாவின் தோழிகள் பவுசிகா, தீபிகா. பவுசியாவிடம் யான்சி நெருக்கமாக பழகி வந்துள்ளார். நண்பர்களாகவும் இருந்துள்ளனர். யான்சியின் வீட்டுக்கும் பவுசியா வந்து சென்றுள்ளார். இவர்கள் ஐவரும் சென்னை வந்து சந்தித்தும் பேசி இருக்கின்றனர். இதனிடையே, கடந்த 28ம் தேதி யான்சி, பவுசியா ஆகியோர் சினிமாவுக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டுள்ளனர். பின் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரியவரும் நிலையில், பவுசியாவின் தாய் இருவரையும் கண்டித்து இருக்கிறார்.

இளைஞர் கும்பல்:

யான்சியையும் ஊருக்கு செல்ல அறிவுறுத்திய நிலையில், அவர் ஊருக்குச் செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட நிலையில், தாபிதாவின் வீட்டில் தங்கி இருக்கின்றனர். பின் இவர்கள் உட்பட 6 பேர், சம்பவத்தன்று தவெக நிர்வாகியின் ஓட்டலுக்கு இரவு 11 மணியளவில் ஒன்றாக சென்று மதுபானம் அருந்தியுள்ளனர். இந்த பாரில் அரும்பாக்கம் பகுதியில் வசித்து வந்த பாலகுரு (வயது 21), சூளைமேடு ஜோஷுவா (வயது 19), நெற்குன்றம் கிஷோர் குமார் (வயது 19), சுமன் சக்திவேல் உட்பட 7 பேர் ஒன்றாக மதுபானம் அருந்தி இருக்கின்றனர்.

உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தல்:

டிஜே இசையை ஒலிக்கவிட்டதும் யான்சி உட்பட தோழிகள் நடனமாடி இருக்கின்றனர். அப்போது, சுமன் சக்திவேல் மற்றும் பாலகுரு குழுவினர் சேர்ந்து பெண்களுடன் நடனமாடிவிட்டு, இன்று ஒருநாள் நைட் எங்களுடன் இருக்க முடியுமா? என கேட்டு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். இந்த விஷயத்துக்கு யான்சி, அவருடன் இருந்த 3 பேர் ஒப்புக்கொண்டதாக தெரியவருகிறது. பிற 3 பெண்கள் உல்லாசத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. சுமன் தரப்பு எங்களுடன் 6 பேரும் இருக்க வேண்டும், இல்லையென்றால் விடமாட்டோம் என கட்டாயப்படுத்தி இருக்கிறது. இதனால் தகராறு உண்டாகி 3 பெண்கள் வீட்டுக்கு புறப்பட்டு வெளியேறியுள்ளனர். 

கைகலப்பு & கடத்தல் முயற்சி:

சக்திவேல் தரப்பு பெண்களின் கையைப்பிடித்து இழுத்து, கட்டியணைத்து தப்பித்து போக கூடாது என வம்பிழுத்து வாக்குவாதம் செய்துள்ளது. இதனால் இருதரப்பிலும் பிரச்சனை உண்டாகி இருக்கிறது. யான்சி ஒருகட்டத்தில் பாலகுரு, அவர்களின் தோழர்களை செருப்பால் அடித்து இருக்கிறார். இதனை பாருக்குள் கைகலப்பு உண்டாகி, பவுன்சர்கள் குறுக்கிட்டு அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி இருக்கின்றனர். யான்சி இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றபோது, பாலகுரு தரப்பு பணம் தருவதாகவும், உல்லாசம் வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி காரில் ஏற்ற முயற்சித்துள்ளது.

கொலை சம்பவம்:

மீண்டும் அங்கு இருதரப்பு சண்டை உண்டாகிய நிலையில், பவுன்சர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். போதையில் இருந்த யான்சி, 17 வயது தோழி தீபிகா ஒரு ஸ்கூட்டரில், பவுசியா, தாபிதா என 4 பேர் மற்றொரு வாகனத்திலும் புறப்பட்டுள்ளனர். இவர்கள் தாபிதாவின் வீட்டுக்கு சென்றபோது, காரில் வந்த பாலகுரு தரப்பு இவர்களை விரட்டி இருக்கிறது. காரின் மீது யாமினி கற்களை வீச, எதிர்தரப்பு யான்சி, தீபிகா பயணித்த காரில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவரும் படுகாயம் அடைத்தனர். ஆத்திரம் தீராத கும்பல் மீண்டும் மோதிவிட்டு தப்பிச் சென்றது.

பெண் பலி:

இந்த சம்பவத்தில் யான்சி தலையில் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தீபிகா படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார். விபத்தை நேரில் பார்த்து பதறிப்போன 4 இளம்பெண்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து இருக்கின்றனர். உயிருக்கு போராடிய பெண்ணை பார்த்த மக்கள், அவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை அழகியான யான்சியின் உடலை அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின் கோயம்பேடு காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து சக்திவேல், பாலகுரு தரப்பை கைது செய்தனர். இவர்களின் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர்களில் தலைமறைவாக உள்ள 4 பேரை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடைய பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அக்காவின் ஆசைக்கு தம்பி எதிர்ப்பு.. 7 வயது மகள் கண்முன் தாய்மாமன் நடத்திய பயங்கரம்.. நெல்லையில் கொடூரம்.. பகீர் பின்னணி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Crime news #யான்சி கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story