×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அக்காவின் ஆசைக்கு தம்பி எதிர்ப்பு.. 7 வயது மகள் கண்முன் தாய்மாமன் நடத்திய பயங்கரம்.. நெல்லையில் கொடூரம்.. பகீர் பின்னணி.!

Tirunelveli Crime News: 34 வயது பெண் வங்கி மேலாளர் ஓடஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

Advertisement

மகளின் கண்முன் தாய் கொலை செய்யப்பட்ட பயங்கரம் பாளையங்கோட்டையில் அரங்கேறி இருக்கிறது.

காதல் திருமணம்:

Nellai News Today: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு, சென்னல்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரின் மகள் முத்துமாலை (வயது 34). இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருக்கும் அரசுடமை வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். வங்கித்தேர்வின் போது தன்னுடன் ஒரே மையத்தில் பயின்று வந்த சங்கர் (வயது 36) என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!

விவாகரத்து:

Nellai Bank Manager Murder: தம்பதிகளுக்கு தற்போது 7 வயதுடைய மகள் இருக்கிறார். இதனிடையே, இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் வங்கிக்கு மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டார். பின் விவாகரத்து பெற்றுக்கொண்ட சங்கர், ஆந்திரப்பிரதேசத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே இருக்கிறார். 

மகள் கண்முன் கொலை:

7 வயது மகளின் முத்துமாலை பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தபடி, தினமும் வேலைக்கு பேருந்தில் சென்று வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக பாளையங்கோட்டை, தியாகராஜ நகரில் குடியேறி இருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த முத்துமாலையை இரண்டு பேர் மறித்து தகராறு செய்தனர். பின் அவரது மகள் கண்முன்னே முத்துமாலையை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

காவல்துறை விசாரணை:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியானது.

பரபரப்பு தகவல் அம்பலம்:

அதாவது, முத்துமாலை பெற்றோர் வீட்டில் இருந்தபோது, தனது சித்தி வீட்டுக்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார். அப்போது, அங்கு தங்கியிருந்த லாரி ஓட்டுநரான நாங்குநேரி, ஆழ்வாரநேரியைச் சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில், இதனை அறிந்த உறவினர்கள் இருவரையும் கண்டித்து இருக்கின்றனர். இதனை கண்டுகொள்ளாத முத்துமாலை வாலிபரிடம் பேசி வந்துள்ளார். 

குற்றவாளிகளுக்கு வலைவீச்சு:

இதனால் ஆத்திரமடைந்த முத்துமாலையின் தம்பி பன்னீர்செல்வம், தனது நண்பர் சிவாவுடன் சேர்ந்து முத்துமாலையை வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சித்தி மகன் இசக்கிபாண்டி (வயது 32) கைது செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகள் பன்னீர் செல்வம், சிவா ஆகியோரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #tirunelveli #Nellai Bank Manager #காதல் விவகாரம் #கொலை #பெண் வங்கி மேலாளர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story