ஸ்ரீ ராம நவமி 2025 எப்போது? பூஜை நேரம், வழிபடும் முறை.. முழு விபரம் இதோ.!
விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமரை போற்றி கொண்டாடப்படும் ராம நவமி பண்டிகை மார்ச் 27ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் கோவில்களில் மற்றும் வீட்டிலேயே சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.
2026 ஆம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி எப்போது கொண்டாடப்படுகிறது? வீட்டிலேயே வழிபடுவது எப்படி? நல்ல நேரம் குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Sri Rama Navami 2026: இந்துக்கள் பெரிய அளவில் சிறப்பித்து கொண்டாடும் ஸ்ரீ ராம நவமி பண்டிகை தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய விஷ்ணுவின் ஏழாவது அவதாரத்தை போற்றி கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தின் நவமி திதியில் சிறப்பிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் ஸ்ரீ ராமரின் ஆசி பெற்று குடும்பம் செழிக்கவும், செல்வம் பெருகவும், மகிழ்ச்சி நிலைக்கவும் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.
2026 ராம நவமி தேதி மற்றும் நேரம்:
2026 ஆம் ஆண்டு நவமி திதி மார்ச் 26 ஆம் தேதி பிற்பகல் தொடங்கி மார்ச் 27ஆம் தேதி நண்பகல் வரை இருக்கிறது. அந்த வகையில் மார்ச் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராம நவமி கொண்டாடப்படுகிறது. ராம நவமியன்று சூரிய உதயத்திற்கு பிறகு ராமரை வழிபடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ராம நவமியில் காலை 11:06 மணி முதல் 01:31 மணி வரை விரதம் இருந்து அல்லது பூஜைகள் செய்து வழிபடலாம்.
இதையும் படிங்க: Maha Shivaratri: மகா சிவராத்திரி 2026.. விரதத்தின் பலன்கள் கிடைக்க இதெல்லாம் கட்டாயம்..!
வீட்டில் வழிபாடு செய்யும் முறை:
இந்த நாளில் ராமர் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வது, ராமாயணம் பாராயணம் செய்வது, ராம நாமம் சொல்வது நன்மையை அளிக்கும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே ராமர் படத்தை அல்லது சிலையை வைத்து பூஜை செய்து வழிபடலாம். பூஜை அறையை பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி ஸ்ரீ ராம ஜெயம் எனும் நாமத்தை உச்சரித்து மனதார வேண்டும் பட்சத்தில் ராமரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். நீர்மோர், பால், தயிர் உள்ளிட்டவைகளை நெய்வேத்யமாக வைத்து பிரார்த்தனை செய்யலாம்.
ராம் என்ற சொல்லின் அர்த்தம்:
'ராம்' என்றால் ஆனந்தம், அமைதி, ஒளி உட்பட பல்வேறு அர்த்தங்களை குறிக்கும். 'ராம' என்ற பெயர் தெய்வப் பெயராக மட்டுமல்லாமல் நல்லொழுக்கம், அமைதி மற்றும் தர்மம் போன்றவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சுமங்கலி வரத்தை தரும் காரடையான் நோன்பு 2026 எப்போது? முழு விபரம் இதோ.!