×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Maha Shivaratri: மகா சிவராத்திரி 2026.. விரதத்தின் பலன்கள் கிடைக்க இதெல்லாம் கட்டாயம்..!

Maha Shivaratri 2026: சிவராத்திரியின் உண்மையான அர்த்தம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

2026ம் ஆண்டுக்கான சிவராத்திரி பண்டிகை பிப்ரவரி மாதம் 15ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் சிவன் - பார்வதியை வழிபடுவது நன்மை தரும்.

மகா சிவராத்திரி 2026:

Maha Shivaratri Celebration 2026: மகா சிவராத்திரி என்பது மனதை சுத்தப்படுத்தி, ஆத்மாவை வணங்கி, பக்தியை ஆழப்படுத்தும் புனிதமான இரவு ஆகும். அந்த நாளில் உடலும் மனமும் ஒருங்கிணைந்து சிவ சிந்தனையில் நிலைக்க, விரதத்தின் முழு பலனும் கிடைக்கும். 2026 ஆம் ஆண்டின் மகா சிவராத்திரி அன்று, அதிகாலை எழுந்து குளித்து சுத்தமான உடை அணிந்து, பூஜை அறையில் விளக்கேற்றி மன அமைதியுடன் விரதத்தை தொடங்குவது சிறப்பு. "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை மனதார உரைத்து விரதத்தை தொடங்கலாம்.

இதையும் படிங்க: கார்த்திகை மாத பௌர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?.!

மகா சிவராத்திரி விரத முறைகள்:

விரதம் என்பது சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல. மனதை கட்டுப்படுத்துவது அதன் பிரதான நோக்கம் ஆகும். உடல்நலம் சரியில்லாதவர்கள் பால், பழம் அல்லது தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோர் தங்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு லேசான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். விரத நாளில் கோபம், குறை கூறுதல் தவிர்க்கப்பட வேண்டும். அமைதியாக இருப்பதே முக்கியம். மனதில் சிவன் மந்திரத்தை உரைப்பது நலல்து.

அபிஷேக பிரியர்:

சிவனுக்கு உகந்த பூஜை முறைகள் மகா சிவராத்திரியில் முக்கிய இடம் பெறுகின்றன. தங்கம், வைரம் போன்ற ஆடம்பரங்களை விட சிவனுக்கு அன்புடன் சமர்ப்பிக்கப்படும் ஒரு கைப்படி வில்வ இலைகள் சிறந்தது. மாலை நேரத்தில் சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிவலிங்கம் அல்லது சிவன் படத்துக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். சிவனை அபிஷேக பிரியர் என்றும் சொல்வதால், அதனை மனதார செய்ய வேண்டும்.

பசியுடன் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்வது, ஏழை மக்கள் & வாயில்லா ஜீவன்கள், பசுமாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் அளிப்பது புண்ணியம் தரும். 

இதையும் படிங்க: அசைவம் சாப்பிட்ட பின் விளக்கேற்றி பூஜை செய்யலாமா?.. கவனிக்க வேண்டியவை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Maha Shivaratri 2026 #மகா சிவராத்திரி 2026 #சிவராத்திரி #Mahashivratri Viratham
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story