SA Vs AFG: சூப்பர் ஓவர் த்ரில்.. கடைசி வரை போராடிய ஆப்கானிஸ்தான்.. தென் ஆப்பிரிக்கா தெறி வெற்றி..!
South Africa Vs Afghanistan இடையேயான டி20 போட்டி பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியது. இறுதியில் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது.
தென்னாபிரிக்கா Vs ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் சுவாரசியம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தென்னாபிரிக்கா அசத்தல் பேட்டிங்:
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. டி காக் 59 ரன்களும், ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க: IND Vs SA ODI: சதம் கடந்து விளாசிய விராட் கோலி.. 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி.!
தவித்துப்போன ஆப்கானிஸ்தான்:
187 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தொடக்கத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மறுபுறம் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்த அவர், பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிக்கருகே அழைத்துச் சென்றார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்து, ரசிகர்கள் எதிர்பாராத வகையில் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது.
திரில் தந்த சூப்பர் ஓவர்:
முதல் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியும் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் சேர்த்ததால், முதல் சூப்பர் ஓவரும் டை ஆனது. இதனால் போட்டி மேலும் பரபரப்பாக இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது. இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, எந்த விக்கெட்டையும் இழக்காமல் 23 ரன்கள் குவித்து, ஆப்கானிஸ்தான் முன் கடின இலக்கை வைத்தது.
திரில் தந்த நொடிகளுடன் வெற்றி:
24 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸ் மீண்டும் போராடினார். கேசவ் மஹாராஜ் வீசிய இரண்டாவது சூப்பர் ஓவரில் அவர் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை (ஹாட் ட்ரிக் சிக்ஸர்கள்) விளாசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் ஆட்டம் மீண்டும் டை ஆகும் என்ற நிலையில், குர்பாஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்களிலேயே சுருண்டு, தென் ஆப்பிரிக்கா திகைப்பூட்டும் வெற்றியை பதிவு செய்தது.
நூர் அகமத்தின் அதிரடி ஆட்டம்:
இந்த போட்டியில் தோல்வி அடைந்த பிறகு, குர்பாஸ் முகத்தை மூடி அழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வெற்றியை விட போராட்டமே பெரியது என்பதை நிரூபித்த இந்த ஆட்டம், இந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராடி தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான்:
இதையும் படிங்க: வரலாறு படைத்த கோலி.. சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து முதலிடம்.!