×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

IND Vs SA ODI: சதம் கடந்து விளாசிய விராட் கோலி.. 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி.!

IND vs SA முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

IND vs SA முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 135 ரன்கள் விளாசி சதம் கடந்து அதிரடி காட்டினார். இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியை வென்றது.

இந்தியா - தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகள் 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.‌ இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் தென்னாபிரிக்க அணி டெஸ்ட் தொடரின் கோப்பையை கைப்பற்றியது. நேற்று தொடங்கி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.‌ முதல் ஒருநாள் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் பேட்ஸ்மெண்ட்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினார். 

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி (India Vs South Africa 1st ODI):

18 ரன்களில் ஜெய்ஸ்வால் அவுட்டான நிலையில், விராட் கோலி - ரோகித் சர்மா இணை சேர்ந்து பேட்டிங் செய்தது. இதனை தொடர்ந்து ரோஹித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார். விராட் கோலி 135 ரன்கள் வரை விளையாடி சதம் கடந்து அதிரடி காட்டினார். கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து 60 ரன்கள் குவித்திருந்தார். ஜடேஜா 32 ரன்களில் அவுட்டானார். மொத்தமாக 50 ஓவர்களில் இந்திய அணி 349 ரன்கள் எடுத்தது. 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் 49.2 ஓவர்களில் 332 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். 

17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி:

இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியதால், ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வியை ஈடு செய்ய போராடி வருகிறது. 

விராட் கோலியின் அனல்பறக்க வைக்கும் பேட்டிங் (Virat Kohli Batting):

Advertisement

 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story