வரலாறு படைத்த கோலி.. சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து முதலிடம்.!
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அதிக தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றார்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை பெற்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இதில் மூன்றாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவர் முடிவில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் சார்பில் விளையாடிய டி காக் 16 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா:
கேப்டன் பௌமா 48 ரண்களில் வெளியேறி இருந்தார். 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய தேசிய கிரிக்கெட் அணி 39.5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 116 ரன்களும், கோலி 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதையும் படிங்க: IND Vs SA ODI: சதம் கடந்து விளாசிய விராட் கோலி.. 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி.!
தொடர் நாயகன் விருது:
இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் 2 சதம், 1 அரை சதம் அடித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இந்த சாதனையின் மூலமாக சர்வதேச போட்டிகளில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி முறியடித்திருக்கிறார்.
முதல் இடத்தில் கோலி:
சச்சின் இதுவரை 20 முறை தொடர் நாயகன் விருது பெற்ற நிலையில், கோலி 21 முறை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் சாகிப் அல் ஹசான் 17 விருது பெற்று 3 வது இடத்தில் இருக்கிறார்.