×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியா Vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன?

ICC Men's T20 World Cup 2026: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி மோதும் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Advertisement

ஆண்கள் டி20 உலகக்கோப்பையில், நாளை நடைபெறும் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்த போட்டியை ஜியோவில் நேரலையில் பார்க்கலாம்.

இந்தியா Vs பாகிஸ்தான் ஆட்டம்:

IND Vs PAK T20 Worldcup: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 4 பிரிவுகளாக நடக்கும் ஆட்டம் மொத்தமாக 55 போட்டிகளை கொண்டுள்ளது. இதுவரை 24 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. நாளை இலங்கையின் கொழும்பு ஆர். பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டி ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: IND Vs SA ODI: சதம் கடந்து விளாசிய விராட் கோலி.. 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி.!

பகல்ஹாம் தாக்குதலுக்குப்பின் மாற்றம்:

pahalgam Terror Attack: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்பின் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராஜாங்க உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது, இந்திய கிரிக்கெட் அணியினர் கைகுலுக்க மறுப்பு தெரிவித்தனர். இது பேசுபொருளானது. இந்த நிகழ்வுக்குப்பின் இந்தியாவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் விளையாடாது என பாகிஸ்தான் போர்க்கொடி தூக்கியது.

இலங்கைக்கு புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி:

வானிலை நிலவரம் எப்படி?

India Vs Pakistan T20 World Cup 2026: மேலும், பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தது. ஐசிசி வரை சென்று தனது எதிர்வினையாற்ற முயற்சி செய்தது. ஆனால், எதுவும் நடக்காமல் போனது. இவ்வாறான பரபரப்புக்கு மத்தியில் நாளை (பிப்.15) இலங்கையில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் டி20 போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியின்போது, இலங்கையில் திடீர் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டு இருப்பதால், வானிலை என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

எதிர்பார்ப்பு:

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் அணியும் தீவிர களப்பயிற்சி எடுத்து வருகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - சல்மான் அலி ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி மோதும் இந்த ஆட்டம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கபடுகிறது. இந்த போட்டிகளை நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி மற்றும் ஜியோ செயலியில் பார்க்கலாம்.

போட்டி அணிகள்: இந்தியா Vs பாகிஸ்தான் 
நடக்கும் இடம்: ஆர். பிரேமதாசா மைதானம், கொழும்பு, இலங்கை
போட்டி தொடங்கும் நேரம்: இரவு 07:00 மணி
போட்டி நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் செயலி & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி
வானிலை நிலவரம்: மழைக்கான வாய்ப்புகள் உண்டு

இதையும் படிங்க: SA Vs AFG: சூப்பர் ஓவர் த்ரில்.. கடைசி வரை போராடிய ஆப்கானிஸ்தான்.. தென் ஆப்பிரிக்கா தெறி வெற்றி..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sports #cricket #India Pakistan T20 Match Time #ind vs pak #t20 world cup
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story