×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்? இன்று இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை!

ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்? இன்று இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை!

Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், முதலாவதாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடர் சமநிலையில் உள்ளது.

இதையும் படிங்க: வரலாறு படைத்த கோலி.. சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து முதலிடம்.!

இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 3 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி சமனிலும் முடிந்துள்ளது.

இதையும் படிங்க: பதிலடி கொடுக்குமா இந்திய அணி? இங்கிலாந்துடன் இன்று 4வது டி20!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ind vs eng #Rohit sharma #London lord's #Virat Kohli #Gautham Gambhir
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story