பதிலடி கொடுக்குமா இந்திய அணி? இங்கிலாந்துடன் இன்று 4வது டி20!
பதிலடி கொடுக்குமா இந்திய அணி? இங்கிலாந்துடன் இன்று 4வது டி20!
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று இரவு 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், முதலாவதாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது வருகிறது. அதன்படி இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மழையால் முடிவில்லாமலும், 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 4வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு ப்ரிஸ்டல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
இதையும் படிங்க: IND Vs SA ODI: சதம் கடந்து விளாசிய விராட் கோலி.. 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி.!
இந்திய அணி கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் தேர்வு மற்றும் பயிற்சியாளர் கம்பீரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
அதேபோல் இளம் வீரரான சூரியவன்சி கடந்த 2 போட்டிகளில் விளையாடி பெரிதாக ரன் குவிக்காததால் இந்த போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுப்பார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் கடந்த போட்டியில் விளையாடாத இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சஞ்சுவ் சாம்சன் இன்றைய தினம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வரலாறு படைத்த கோலி.. சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து முதலிடம்.!