×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்பா The Wall.. மகன் சரவெடி! 211 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ட்ராவிட் மகன்!

அப்பா The Wall.. மகன் சரவெடி! 211 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ட்ராவிட் மகன்!

Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் யூத்  ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக், 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், ஆட்டத்தை மாற்றும் வகையில் களமிறங்கினார் ராகுல் ட்ராவிட்டின் மகன் அன்வே ட்ராவிட்.

6-வது வீரராக களமிறங்கிய அன்வே த்ராவிட், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டார். வெறும் 18 பந்துகளில் 38 ரன்கள் குவித்த அவர், 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 211.11 ஆக இருந்தது. இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

இதையும் படிங்க: CSK-க்கு இந்திய பயிற்சியாளர்? தோனியின் ஆலோசனையால் பரபரக்கும் பயிற்சியாளர் தேர்வு!

மறுபுறம் யஷ்பர்தன் சவுகான் 34 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அன்வே ட்ராவிட் மற்றும் யஷ்பர்தன் சவுகான் இணைந்து முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் கேப்டன் ஜாக் ஜோஸ்னெக் 27 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்கள் இறுதிக்கட்டத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டதால், ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ராகுல் த்ராவிட்டின் மகன் அன்வே ட்ராவிட்டின் அதிரடி 38 ரன்கள் இந்தப் போட்டியின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: மகளிர் பிரீமியர் லீக் 5-வது சீசன்.. ஏலம் முதல் போட்டி தொடக்கம் வரை.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IND19 vs AUS19 #Rajkot #rahul dravid #Anvay Dravid
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story