CSK-க்கு இந்திய பயிற்சியாளர்? தோனியின் ஆலோசனையால் பரபரக்கும் பயிற்சியாளர் தேர்வு!
CSK-க்கு இந்திய பயிற்சியாளர்? தோனியின் ஆலோசனையால் பரபரக்கும் பயிற்சியாளர் தேர்வு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டீபன் ஃபிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் CSK நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
IPL 2026 சீசனில் CSK பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத நிலையில், அணியின் பயிற்சி மற்றும் நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இதனிடையே, இந்திய பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மஹிந்திர சிங் ஆலோசனை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, முன்னாள் இந்திய வீரர்களான ஹேமங் பதானி, ராகுல் டிராவிட் உள்ளிட்டோரின் பெயர்கள் ஏற்கனவே பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, CSK-க்கு உள்ளூர் கிரிக்கெட் சூழலை நன்கு அறிந்த இந்திய பயிற்சியாளர் ஒருவர் வந்தால் அணியின் இளம் வீரர்களுடன் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்படும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: CSK-வின் அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சனா? பரபரக்கும் பேச்சு!
முன்னாள் CSK வீரர் மேத்யூ ஹெய்டன், தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் CSK-ன் தலைமைப் பயிற்சியாளராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ஹேமங் பதானி CSK-ன் அடுத்த பயிற்சியாளராக வரக்கூடிய முன்னணி போட்டியாளர்களில் ஒருவராக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, MS தோனியின் எதிர்காலமும் CSK-ல் முக்கிய விவாதமாக உள்ளது. IPL 2027-ல் அவர் வீரராக தொடர்வாரா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. CSK தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதனும், தோனி தனது எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவை தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், தோனி பயிற்சியாளர் அல்லது வழிகாட்டி போன்ற வேறு பொறுப்புக்கு மாறக்கூடும் என்ற விவாதமும் தொடர்கிறது.
இதையும் படிங்க: CSK-வின் அடுத்த பயிற்சியாளர் ரெய்னா? இணையத்தில் வைரலாகும் பேட்டி?