CSK-வின் அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சனா? பரபரக்கும் பேச்சு!
CSK-வின் அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சனா? பரபரக்கும் பேச்சு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அணியின் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான சஞ்சு சாம்சன், 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டார். கேப்டனாக ஏற்கனவே அனுபவம் பெற்றுள்ள அவர், CSK அணிக்கு எதிர்காலத்தில் தலைமை ஏற்கும் வாய்ப்பு குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் சதகோபன் ரமேஷ், சஞ்சு சாம்சனை CSK-வின் அடுத்த கேப்டனாக பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னாள் CSK வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்தும், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டால், பேட்டிங்கில் அவர் மேலும் சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: CSK-வின் அடுத்த பயிற்சியாளர் ரெய்னா? இணையத்தில் வைரலாகும் பேட்டி?
இதனால், “ருதுராஜ் கெய்க்வாடா? சஞ்சு சாம்சனா?” என்ற கேள்வி CSK ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், சஞ்சு சாம்சனிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பது குறித்து அணி நிர்வாகம் இறுதி முடிவு எடுத்ததாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதையும் படிங்க: மகளிர் ஆசியக் கோப்பை: இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை!