×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#அதிர்ச்சி : ஆளுநர் மாளிகையில் விஜய்.... பனையூரில் இருந்த 10 எம்.எல்.ஏ-க்கள் திடீர் மாயம்.! அடுத்தக்கட்ட ஆதரவு யார்?..!!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

Advertisement

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பைச் சுற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 108 எம்.எல்.ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகம், தேவையான ஆதரவை திரட்ட தீவிர அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது.

தகவலின்படி, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை எட்ட இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. இதனால், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: BREAKING : இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.! இப்போ ஓகே சொல்லனா அடுத்த கட்டமாக அதிரடி முடிவு தான்... ஒரு முடிவோடு கிளம்பிய விஜய்!!!

பனையூரில் திடீர் மாற்றங்கள்

ஆட்சியமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் வழங்கும் திட்டத்தில் இருந்த விஜய், பனையூர் அலுவலகத்தில் எம்.எல்.ஏக்களுடன் நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டத்தை திடீரென ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஆளுநர் மாளிகைக்குச் சென்றதே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

இதையடுத்து, மாமல்லபுரம் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் பனையூருக்கு வரவழைக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அங்கு நேரில் சென்று ஒருங்கிணைப்பு பணிகளை கவனித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.எல்.ஏக்கள் மாயம் என்ற தகவல்

பனையூர் அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் வெளியேறியதாக தகவல் பரவியதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. குதிரை பேரம் குறித்த சந்தேகங்களும் எழுந்தன.

ஆனால், கட்சி நிர்வாகிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர். “எம்.எல்.ஏக்கள் சொல்லிவிட்டுத்தான் வெளியே சென்றுள்ளனர். எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை” என்று அவர்கள் விளக்கம் அளித்தனர். அதன்பின், வெளியேறியதாக கூறப்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் இரவு நேரத்தில் அலுவலகத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்த கட்டத்தில் யாரின் ஆதரவு?

இதற்கிடையே, விசிக மற்றும் இடதுசாரிகள் ஆதரவு அளிக்காத சூழல் உருவானால், தவெக தரப்பு அதிமுகவின் ஆதரவை நாடும் நிலை ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மறுபுறம், திமுக - அதிமுக இணைப்பு குறித்து பரவும் தகவல்களையும் தவெக தரப்பு நிராகரித்துள்ளது. இன்று முக்கிய கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த உள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து தமிழக அரசியல் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளது.

 

இதையும் படிங்க: இன்று விஜய் எடுக்கப்போகும் இறுதி முடிவு... அடுத்த சில மணிநேரத்தில் அரங்கேறப்போகும் கிளைமாக்ஸ்! தீவிர முயற்சியில் விஜய்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #TVK #Tamil Nadu Politics #Vck #AIADMK
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story