×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING : இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.! இப்போ ஓகே சொல்லனா அடுத்த கட்டமாக அதிரடி முடிவு தான்... ஒரு முடிவோடு கிளம்பிய விஜய்!!!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் குழப்பத்துக்கு மத்தியில், பெரும்பான்மை நிரூபிப்போம் என விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார்.

Advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார்.

113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியல்

நேற்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த விஜய், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பட்டியலை வழங்கினார். மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை இன்னும் எட்டப்படவில்லை என்று ஆளுநர் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலின்படி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தது 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் என்பதால், உடனடியாக ஆட்சி அமைக்க அனுமதி வழங்க முடியாது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய மாற்றம்.... நாளை காலை 11:30 மணிக்கு விஜய்க்கு பிரம்மாண்டாமாக நேரு ஸ்டேடியத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா!!!

பதவியேற்பு விழா தற்காலிகமாக நிறுத்தம்

இதனால் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட முதலமைச்சர் பதவியேற்பு விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் ஆதரவை திரட்டும் பணியில் த.வெ.க நிர்வாகிகள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும், தனிப்பெரும் கட்சியாக உள்ள நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்று ஆளுநரிடம் மீண்டும் வலியுறுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றம்?

சட்டசபையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக ஆளுநரிடம் உறுதி அளிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். ஒருவேளை இந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என்றால், அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பும் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

இதையும் படிங்க: புதிய சட்ட சிக்கலில் சிக்கிய விஜய்! விஜய்க்கு செக் வைத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்! ஆளுநருக்கு அவசரமாக பறந்த பரபரப்பு கடிதம்..!!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #TVK #தமிழக அரசியல் #Governor RN Ravi #Government Formation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story