×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதிய மாற்றம்.... நாளை காலை 11:30 மணிக்கு விஜய்க்கு பிரம்மாண்டாமாக நேரு ஸ்டேடியத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா!!!

தவெக தலைவர் விஜய், 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ளன.

Advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் சூழல் வேகமாக மாறி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பு மாநில அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது தவெக வசம் 108 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் விஜய் ஆளுநரிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: நொடிக்கு நொடி பரபரப்பு..... ஆளுநருக்கு விஜய் அனுப்பிய இரண்டாவது கடிதம்! மே 7ல் நடக்க போவது என்ன? ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்பில்...!!!

நாளை பதவியேற்புக்கு அனுமதி கோரல்

ஆளுநருடனான சந்திப்பில், மே 7 காலை 11.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக பதவியேற்க அனுமதி வழங்குமாறு விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்பின், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வார கால அவகாசமும் கோரியுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பு சுமார் சில நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது.

பெரும்பான்மைக்கான கணக்கில் தீவிரம்

தகவலின்படி, ஆட்சியை அமைக்க தேவையான எண்ணிக்கைக்கு இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகின்றது. இதனால், மீதமுள்ள ஆதரவுகளைப் பெற தவெக தரப்பு தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் ஆட்சி அமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொருபுறம் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் சென்னை நகரில் வேகமெடுத்துள்ளன. இதனால் நாளை தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்....ஆளுநர் மாளிகையில் தெரியப்போகும் 3 மணி க்ளைமாக்ஸ்! விஜய்யின் கையில் இருக்கும் அந்த 'ரகசிய' கடிதம்.! நேரு ஸ்டேடியத்தில் தீவிர ஏற்பாடுகள்....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #TVK Government #Tamil Nadu Politics #Governor Meeting #Congress Support
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story