நொடிக்கு நொடி பரபரப்பு..... ஆளுநருக்கு விஜய் அனுப்பிய இரண்டாவது கடிதம்! மே 7ல் நடக்க போவது என்ன? ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்பில்...!!!
தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. விஜய் இன்று நேரில் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் வட்டாரங்களில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் தேவை
தகவலின்படி, தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெகக்கு மேலும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால், சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என விஜய் தனது கடிதத்தில் கோரியுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட புள்ளிவிவர அறிக்கைக்கு பின், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் கையெழுத்துகளும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: முக்கிய அரசியல் மேடையில் வேட்பாளர் பட்டியல் மற்றும் விஜயின் தொகுதி அறிவிப்பு.....! அனல் பறக்கும் அரசியல் கலம்!
இரண்டாவது கடிதத்துடன் அமைச்சரவை விவரங்கள்
இதையடுத்து, அமைச்சரவை தொடர்பான ஆரம்ப விவரங்களும் சேர்த்து இரண்டாவது முறையான கடிதத்தை தவெக சமர்ப்பித்துள்ளது. ஆளுநர் மாளிகையின் அறிவுறுத்தலின்படியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 7-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்
இன்று (மே 6) விஜய் நேரில் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் வேகமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.