இன்று விஜய் எடுக்கப்போகும் இறுதி முடிவு... அடுத்த சில மணிநேரத்தில் அரங்கேறப்போகும் கிளைமாக்ஸ்! தீவிர முயற்சியில் விஜய்!!!
தமிழகத்தில் எந்த கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க விஜய் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் கடந்தும் ஆட்சி அமைப்பதில் தெளிவு ஏற்படாததால், அரசியல் வட்டாரங்களின் முழு கவனமும் சென்னை கோட்டையை நோக்கி திரும்பியுள்ளது.
234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டசபையில் எந்தக் கட்சியும் 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டாத நிலையில், 108 இடங்களை கைப்பற்றிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், தேவையான ஆதரவை திரட்டிக் கொண்டு ஆட்சியை அமைக்க தவெக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
ஆளுநர் முன் ஆதரவு கடிதங்கள்
தகவலின்படி, விஜய் ஏற்கனவே ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை வழங்கியுள்ளார். இருப்பினும், பெரும்பான்மைக்கு இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால் உடனடி அனுமதி வழங்க ஆளுநர் தயக்கம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
“தேவையான எண்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது” என்ற ஆளுநரின் நிலைப்பாடு, தவெக தரப்பை கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரப்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியை குறிவைக்கும் தவெக
இதையடுத்து, தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தலைமையிலான குழு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் என்ற பேச்சும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், “திமுகவின் முடிவே எங்களது முடிவு” என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளதால், கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்துவது சவாலாக மாறியுள்ளது.
அடுத்த சில மணி நேரங்கள் முக்கியம்
தமிழக அரசியலில் அடுத்த கட்டம் என்ன என்பதற்கான பதில் விரைவில் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. தேவையான ஆதரவை பெற்று ஆளுநர் முன்னிலையில் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பாரா அல்லது மாற்று அரசியல் சூழல் உருவாகுமா என்ற கேள்வி தற்போது தீவிரமாக பேசப்படுகிறது.
அதன்பின், சட்ட ரீதியான ஆவணங்களுடன் விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படிங்க: ரகசிய டீல்....விஜய்க்கு ஆளுநர் கொடுத்த சீக்ரெட் பிராமிஸ்..! அந்த ஒரு வார்த்தையால் நிம்மதியாக கிளம்பிய விஜய்!!!