ரகசிய டீல்....விஜய்க்கு ஆளுநர் கொடுத்த சீக்ரெட் பிராமிஸ்..! அந்த ஒரு வார்த்தையால் நிம்மதியாக கிளம்பிய விஜய்!!!
ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவசியம் என ஆளுநர் நிபந்தனை விதித்துள்ள நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்க உரிமை கோரி மீண்டும் ஆளுநரை சந்தித்துள்ளது. ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்பதில் ஆளுநர் தரப்பு உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
118 ஆதரவு கடிதங்கள் தேவை
தகவலின்படி, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க போதுமான ஆதரவு கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று விஜய் தரப்பிடம் தெரிவித்துள்ளார். அதுவரை பதவியேற்பு தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் கூறப்பட்டதாக தெரிகிறது.
இதனால், “சட்டசபையில் நிரூபிக்க வேண்டிய பெரும்பான்மையை ஆளுநர் மாளிகையிலேயே ஏன் நிரூபிக்க வேண்டும்?” என்ற கேள்வி அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது. சில கட்சிகள் இதை அரசியல் ரீதியான அழுத்தமாகவும் விமர்சித்து வருகின்றன.
அதிமுகக்கு வாய்ப்பு இல்லை?
இதற்கிடையே, விஜய்க்கு ஆளுநர் தரப்பில் ஒரு முக்கிய உறுதி அளிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தவெக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும், உடனடியாக அதிமுக உள்ளிட்ட வேறு கட்சிகளை ஆட்சியமைக்க அழைக்க திட்டமில்லை என்பதே அந்த தகவல் என கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பது அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால் அடுத்த சில மணி நேரங்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.
கூடுதல் ஆதரவுக்கான முயற்சி
தற்போதைய நிலவரப்படி, இரண்டு தொகுதிகளில் வென்றுள்ள விஜய் ஒரு இடத்தை ராஜினாமா செய்தால் த.வெ.கவின் பலம் 107 ஆகக் குறையும். காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தாலும், மேலும் 6 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது.
திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், கூடுதல் ஆதரவை பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. அதேசமயம், இந்த நடவடிக்கைகள் “குதிரை பேரம்” குறித்த விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.
மே 9-ம் தேதியுடன் தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அடுத்த 48 மணி நேரம் தமிழக அரசியலில் தீர்மானிக்கும் காலமாக மாறியுள்ளது. நிலையான அரசு அமையுமா அல்லது புதிய நிர்வாகச் சிக்கல் உருவாகுமா என்பது விரைவில் தெளிவாகும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: கதறி அழுத வேண்டுதல் எப்போதும் வீண் போகாது! தவெக தொண்டரின் கதறல்....அடுத்த சில நிமிடங்களில் விஜய்க்கு வந்த குட் நியூஸ்.!!!