மன்னிப்பு கேட்க வேண்டும்! விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்த தவெக எம்.எல்.ஏ!
மன்னிப்பு கேட்க வேண்டும்! விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்த தவெக எம்.எல்.ஏ!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவரது பேச்சுக்கு தவெக எம்.எல்.ஏ. சுகுமார் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் சமீபத்திய நிகழ்ச்சியில் ஷாத்திகாவின் தலைமைப் பொறுப்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி, தலைமை என்பது வெறுமனே வாக்குறுதிகளை வழங்குவது மட்டுமல்ல எனக் குறிப்பிட்டார். ஒரு பிரச்சினை ஏற்படும்போது அதற்கான பொறுப்பை ஏற்காமல், மற்றவர்கள் மீது பழியை சுமத்துவது சரியான தலைமைத்துவம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பொறுப்பில் இருப்பவர்களிடம் கேள்விகள் எழுப்பப்படும்போது அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த கருத்துகள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. விஜய் சேதுபதியின் பேச்சு அரசியல் ரீதியாக தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்ததாக கருத்துக்கள் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு எதிரொலி… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி?
இந்த நிலையில் சூலூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சுகுமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி தனது பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சுகுமார் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் சேதுபதி செல்லும் இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கருத்து தற்போது அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.
இதனிடையே, விஜய் சேதுபதியின் பேச்சு யாரையும் குறிப்பிட்டு குறிப்பிட்டு பேசவில்லை எனவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூழலை அடிப்படையாகக் கொண்டே அவர் அந்த கருத்துகளை தெரிவித்தாக விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. ஆனால், விஜய் சேதுபதி இதுவரை வெளிப்படையான விளக்கம் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக!.. இன்பதுரை பரபரப்பு பேச்சு!