விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக!.. இன்பதுரை பரபரப்பு பேச்சு!
விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக!.. இன்பதுரை பரபரப்பு பேச்சு!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய தலைமைப் பண்பு குறித்த கருத்துகள் தற்போது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அவரது பேச்சு, நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் சட்டப்பேரவை அமைப்பை மையமாகக் கொண்டு போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நிகழ்ச்சியில் ‘ஜனநாயக அறை’ ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஆளும் அணி மற்றும் எதிரணி என இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
ஆளும் அணியினர் மேற்கொள்ளும் செயல்பாடுகளில் உள்ள குறைகளை எதிரணி சுட்டிக்காட்டும் வகையில் போட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வார இறுதி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் விஜய் சேதுபதி, அவர்களின் செயல்பாடுகளில் உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டி அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
இதையும் படிங்க: தவெகவை எதிர்கொள்ள அதிமுக அதிரடி! மதுராந்தகம்–தாராபுரத்திற்கு வேட்பாளர்கள் ரெடி!
அந்த வகையில், இந்த வார இறுதி நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு, நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, விஜய் சேதுபதியின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என அதிமுக எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.இன்பதுரையின் இந்தக் கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் தவெக - அதிமுக கருத்து மோதலை உருவாக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு.. கூட்டணியை வலுவாக்கும் அதிமுக.. பாரிவேந்தரிடம் ஆதரவு கோரிக்கை!