இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு.. கூட்டணியை வலுவாக்கும் அதிமுக.. பாரிவேந்தரிடம் ஆதரவு கோரிக்கை!
இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு.. கூட்டணியை வலுவாக்கும் அதிமுக.. பாரிவேந்தரிடம் ஆதரவு கோரிக்கை!
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆதரவு கோரி, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்ததால், மீண்டும் அதே தொகுதிகளை கைப்பற்ற அதிமுக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர்கள் பாரிவேந்தரை நேரில் சந்தித்துள்ளனர். தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அவரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... அதிமுக- விலிருந்து விலகிய முக்கிய புள்ளி! அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி...!!!
முன்னதாக, இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அதிமுக சார்பில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனையும் முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து கடிதம் வழங்கியிருந்தனர். தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட அதிமுக திட்டமிட்டுள்ளது.
அந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான தேர்தல் பணிகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிற கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.