×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: சற்று முன்... அதிமுக- விலிருந்து விலகிய முக்கிய புள்ளி! அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி...!!!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகன் முகில் அறிவித்துள்ளார். விஜய்யுடன் கல்லூரி நண்பராக இருந்ததால் தவெகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகன் முகில், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அம்மா பேரவை நிர்வாகியாக இருந்தவர் முகில். நீண்ட காலமாக அதிமுகவில் செயல்பட்டு வந்த அவர், தற்போது கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே கட்சியை விட்டு விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அண்ணி த்ரிஷாகாக தான் இங்க சண்டை நடக்குது! CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே திரிஷா மட்டும் தான்... ஆர்பி உதயகுமார் பேசிய அசிங்கமான பேச்சு! சர்ச்சை வீடியோ...!!!

விஜய்யுடன் கல்லூரி கால நட்பு

முகிலின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் முகிலும் லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்கும் கல்லூரி காலத்திலிருந்தே நட்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தவெகவில் இணைய வாய்ப்பா?

இந்த பின்னணியில், முகில் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. குறிப்பாக விஜய்யுடன் அவருக்கு இருக்கும் பழைய நட்பை சுட்டிக்காட்டி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், தவெகவில் இணைவது குறித்து முகில் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அதிமுகவில் இருந்து விலகியுள்ள முகில், அடுத்ததாக எந்த அரசியல் பாதையை தேர்வு செய்யப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது. அவரது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை, தவெகவில் இணைவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் தொடர்கிறது.

 

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.... தவெக- வில் த்ரிஷாவுக்கு முக்கியப் பொறுப்பு? CM விஜய்யின் அடுத்தக்கட்ட நடவடிகையால் அதிரும் அரசியல் களம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#முகில் #Admk #விஜய் #தவெக #Edappadi Palaniswami
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story