திடீர் ட்விஸ்ட்.... தவெக- வில் த்ரிஷாவுக்கு முக்கியப் பொறுப்பு? CM விஜய்யின் அடுத்தக்கட்ட நடவடிகையால் அதிரும் அரசியல் களம்..!!!
தவெகவில் நடிகை த்ரிஷா இணையலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், தென் மாவட்ட போஸ்டர்கள் மற்றும் அவரது அரசியல் ஆர்வம் குறித்த பேச்சுகள் கவனம் பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், நடிகை த்ரிஷா அக்கட்சியில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் அவரது பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. எனினும், த்ரிஷா தரப்பிலோ அல்லது கட்சி தரப்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தென் மாவட்டங்களில் கவனம் பெற்ற போஸ்டர்கள்
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், “அக்கா த்ரிஷா” என்ற அடைமொழியுடன் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவை தவெக தொண்டர்களின் பின்னணியில் இடம்பெற்றிருப்பதும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், த்ரிஷாவின் அரசியல் வருகைக்கான முன்னேற்பாடாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடியை எதிர்த்து நிற்கும் 2 புள்ளிகள்! விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு.... அதிமுகவை அதிரவைக்கும் அரசியல் நகர்வு!!!
மேலும், த்ரிஷா சில கோயில்களுக்கு யானைகளை தானமாக வழங்கி வருவதாகவும், அரசியலில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளை வைத்து அவர் நேரடி அரசியலுக்கு வரலாம் என்ற கணிப்புகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன.
விஜய் கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைக்குமா?
வரும் தேர்தல் பணிகள் தீவிரமடையும் முன்பாகவே த்ரிஷா தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அவர் இணைந்தால், கட்சியின் கொள்கை சார்ந்த அல்லது மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என தவெக ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு உள்ளது. ஆனால், இதுகுறித்த முடிவு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
விஜய் குடும்ப விவகாரம் குறித்தும் பேச்சு
இதற்கிடையில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து மனு வாபஸ் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வரும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லாததால் இதை உறுதியான தகவலாகக் கருத முடியாது.
ஒருபுறம் விஜய் தலைமையிலான கட்சி தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மறுபுறம் திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கட்சியில் இணையலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் த்ரிஷாவின் பெயர் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், அவரது அடுத்த அரசியல் நகர்வு என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னரே தெளிவாகும்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் தவெக-வுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! விஜய் டேபிளுக்குப் போன அந்த ஷாக் ரிப்போர்ட்... எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட்!!!