BREAKING: திமுக- வின் திடீர் ட்விஸ்ட்! இடைத்தேர்தலில் இரு தொகுதிக்கான திமுக வேட்பாளர்களை கட்சி தலைமை அறிவித்தது....! பரபரக்கும் அரசியல் களம்...!!!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் ஆலோசனைக்கு பிறகு இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. மற்ற கட்சிகளைவிட முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் முதல் அடியை திமுக எடுத்து வைத்துள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யாவும் திமுக வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். இதன் மூலம் திமுக வேட்பாளர்கள் குறித்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் எம். எல்.ஏக்கள் மூலம் விஜய் வைக்கப்போகும் செக்! திமுக, அதிமுக நிலை என்ன? வெளியான ரகசிய தகவல்...!!!
புறக்கணிக்குமா என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி
இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாமல் புறக்கணிக்கலாம் என்ற தகவல் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரவி வந்தது. தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு தேர்தலில் இருந்து விலக திமுக முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவல்களுக்கு மாறாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முக்கிய ஆலோசனை நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் இடைத்தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரு தொகுதிகளிலும் களமிறங்கும் திமுக
ஆலோசனை முடிந்ததும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால், இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கப் போவதாக வெளியான தகவல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை திமுக விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மற்ற கட்சிகள் வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளில் இருக்கும் நிலையில், திமுக முன்கூட்டியே களப்பணியை தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் தேர்தல் வியூகம் எவ்வாறு அமையும் என்பது அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் விலகி நிற்போம் என சொல்லும் ஸ்டாலின்! முடியவே முடியாது என மறுத்த உதயநிதி..... அறிவாலயத்தில் தொடரும் அதிரடி ஆலோசனை...!!!