விஜய் சேதுபதி சர்ச்சைப் பேச்சு விவகாரம்.. சீமான் திடீர் ஆதரவு! என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் சேதுபதி சர்ச்சைப் பேச்சு விவகாரம்.. சீமான் திடீர் ஆதரவு! என்ன சொன்னார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு டாஸ்க்கில், போட்டியாளர்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டனர். இந்த டாஸ்க் தொடர்பாகப் பேசிய விஜய் சேதுபதி, வாக்குறுதிகளை அளித்துவிட்டு, பிரச்சினைகள் மற்றும் பொறுப்புகள் வரும்போது எதிரணியின் மீது பழியைச் சுமத்திவிட்டு விலகுவது தலைமைப் பண்பு அல்ல என விமர்சித்தார்.
விஜய் சேதுபதியின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சிலர் அவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்ததாகக் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, விஜய் சேதுபதிக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள், கருத்துகள் மற்றும் எதிர்வினைகள் அனைத்தும் நிகழ்ச்சியின் கட்டமைப்புக்குள் நடைபெறும் நிகழ்வுகள் என்றும், அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள தனிநபர்கள், அமைப்புகள் அல்லது அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வேண்டும்! விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்த தவெக எம்.எல்.ஏ!
இதனிடையே, விஜய் சேதுபதியின் கருத்து தொடர்பான சர்ச்சையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி தனது பேச்சில் எந்த அரசியல் தலைவரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றும், பொதுவாக தலைமைப் பண்பு குறித்தே அவர் பேசியதாகவும் சீமான் கூறியுள்ளார். இதனை அரசியல் விமர்சனமாக எடுத்துக்கொண்டு அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை மையமாக வைத்து பேசப்பட்ட தலைமைப் பண்பு குறித்த கருத்து, தற்போது திரையுலகைத் தாண்டி அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு எதிரொலி… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி?