நீண்டகால அரசியல் அவுட்! அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்....! செம குஷியில் எடப்பாடி..!!!
ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முடிவுகளால் அதிருப்தியடைந்த கன்னியாகுமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் இருவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முடிவுகளால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இருவர் தாய்க்கழகத்துக்கு திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஓபிஎஸ் அணியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள்
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த திருவட்டார் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முருகன், குலசேகரம் பேரூர் செயலாளர் ஜெஸ்டின் ஆகியோர் தற்போது அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளனர். முன்னாள் குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவராகவும் ஆர்.முருகன் பதவி வகித்துள்ளார்.
இதையும் படிங்க: மேலும் 5 அதிமுக MLA-க்கள் ராஜினாமா? செப்.8-ல் வெடிக்கப்போகும் பூகம்பம்...! அதிர்ச்சியில் அல்லேலப்படும் எடப்பாடி!!!
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் எடுத்த அரசியல் முடிவுகள் அவரது தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே இருவரும் தங்களது அரசியல் முடிவை மாற்றியுள்ளதாக தெரிகிறது.
அதிமுகவுக்கு மீண்டும் திரும்பிய நிர்வாகிகள்
ஆர்.முருகன் மற்றும் ஜெஸ்டின் ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். நீண்ட காலமாக ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த முக்கிய நிர்வாகிகள் தாய்க்கழகத்துக்கு திரும்பியிருப்பது கன்னியாகுமரி மாவட்ட அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
கன்னியாகுமரியில் பரபரப்பு
ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறியிருப்பது, அந்த அணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தகட்டமாக எத்தகைய முடிவை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.