இனி ஸ்டாலின் இல்ல... அவங்க அப்பா கருணாநிதியே நின்னாலும் முடியாது! வெறும் 5 நிமிஷம் தான்.... வெற்றி உறுதி ஆச்சு! கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேச்சு.!!!
தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டத்தில் பேசிய வி.எஸ்.பாபு, திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்து விஜய்யின் அரசியல் செல்வாக்கு குறித்து பேசினார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். தேர்தல் பிரசாரத்தின்போது விஜய் கொளத்தூருக்கு வெறும் 5 நிமிடங்கள் வந்ததே தொகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். மேலும், வரும் காலங்களில் தமிழக அரசியலில் தவெக மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘விஜய் பேச ஆரம்பித்தால் எல்லோரும் ஓடிவிடுவார்கள்’
கூட்டத்தில் பேசிய வி.எஸ்.பாபு, “விஜய் பேச மாட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அவர் பேச ஆரம்பித்தால் இவர்கள் அனைவரும் ஓடிப் போய்விடுவார்கள்” என்று கூறினார். தேர்தல் நேரத்தில் தனக்காக பிரசாரம் செய்ய விஜய் கொளத்தூர் தொகுதிக்கு 5 நிமிடங்கள் மட்டுமே வந்ததாகவும், அந்த வருகையே தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... திடீர் திருப்பம்! தவெகவுடன் கூட்டணி..... வெளியான அறிவிப்பு! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!
“தளபதி வந்தார், ஒரு கொத்து பரோட்டா போட்டார், அதோடு தேர்தல் முடிந்துவிட்டது” என்று குறிப்பிட்ட அவர், விஜய் வந்த நாளில் கொளத்தூர், திரு.வி.க. நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்ததாக கூறினார். அன்றைய கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் திரண்டதை பார்த்தபோதே தனது வெற்றி உறுதி என கணித்ததாகவும் வி.எஸ்.பாபு தெரிவித்தார்.
ஸ்டாலின், கருணாநிதிக்கு எதிராகவும் வெற்றி பெறுவேன் என சவால்
தொடர்ந்து திமுகவை விமர்சித்த அவர், எதிரே மு.க.ஸ்டாலின் நின்றிருந்தாலும் சரி, அவரது தந்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி நின்றிருந்தாலும் சரி, விஜய்யின் அரசியல் அலைக்கு முன்னால் தவெக வெற்றி பெற்றிருக்கும் என்று கூறினார். இந்தத் தேர்தலில் கருணாநிதியே போட்டியிட்டிருந்தாலும் அவரை தோற்கடித்திருப்பேன் என்றும் அவர் அதிரடியாக தெரிவித்தார்.
மேலும், “திமுகவில் கடைசி வரைக்கும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் பதவியில் இருப்பார்கள்” என்று விமர்சித்த வி.எஸ்.பாபு, முன்னாள் திமுக அமைச்சர்கள் யாராவது இனி ஒருமுறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றால் தனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்வதாக மேடையில் சவால் விடுத்தார்.
‘இனி தவெக மட்டுமே ஆட்சி செய்யும்’
விஜய் சொன்னதைச் செய்யக்கூடிய ஒரே தலைவர் என்று பாராட்டிய வி.எஸ்.பாபு, அவரது தலைமையில் தமிழக அரசியல் புதிய பாதையில் செல்லும் என கூறினார். தவெக அரசியல் அலை தொடர்ந்து வலுப்பெறும் என்றும், இனிவரும் காலங்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தமிழக அரசியலில் இடமிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் களத்தில் விஜய்யின் குறுகிய நேர பிரசாரமே தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியதாக வி.எஸ்.பாபு தொடர்ந்து வலியுறுத்தினார். திமுக-அதிமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் அவர் பேசிய இந்தக் கருத்துகள், கூட்டத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையும் படிங்க: கஜானா காலி... ஆனால் கார் மட்டும் எப்படி? ரூ.1500 கோடி ஒதுக்கிட்டு இப்ப ரூ.4000 கோடியா? அடுக்கடுக்கான கேள்வி கேட்டு கொந்தளித்த திமுக எழிலன்..!!!