×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீர் மூச்சுத்திணறல்… ICU-வில் கொளத்தூர் எம்எல்ஏ! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

திடீர் மூச்சுத்திணறல்… ICU-வில் கொளத்தூர் எம்எல்ஏ! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

Advertisement

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வி.எஸ்.பாபுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட தகவல் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விஜய் தலைமையில் புதிய கூட்டணி உதயம்! புதிய பெயர்... புதிய அரசியல் கணக்கு! 

அவரது உடல்நிலை குறித்த கூடுதல் மருத்துவத் தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.இதனிடையே, எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட கட்சி தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் அந்த ஒரு உடல்மொழி! கடும் கண்டனம் தெரிவித்த திருமாவளவனின் எக்ஸ் பதிவு....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kolathur MLA #TVK MLA #VS Babu #Kolathur constitution
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story