சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் அந்த ஒரு உடல்மொழி! கடும் கண்டனம் தெரிவித்த திருமாவளவனின் எக்ஸ் பதிவு....!!!
சட்டப்பேரவையில் விஜய்யின் உடல்மொழி குறித்து திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் கைது தொடர்பான அமைச்சரின் கருத்தையும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதமாகி வருகிறது. மிசா சட்டம் தொடர்பான பேச்சின்போது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தாலும், முதலமைச்சர் விஜய்யின் உடல்மொழி தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் வகையிலான தனிப்பட்ட அணுகுமுறை என்பது வேறு எனக் குறிப்பிட்டுள்ளார். கல்வி, அதிகாரம் அல்லது பொருளாதாரத்தில் எளிய பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களின் தன்மதிப்பை குறைத்து மதிப்பிடுவது நாகரிகமான அரசியல் நடைமுறை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.... என்னையும் தான் CM ஆக்க ஆசைப்படுறாங்க....! உண்மையை புட்டு புட்டு வைத்த திருமாவளவன்...!!!
வயதில் மூத்தவர்களை மதிப்பது சமூகத்தின் முக்கியமான பண்பாடுகளில் ஒன்று எனக் கூறியுள்ள அவர், மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பவர் தனது வார்த்தைகள் மட்டுமின்றி உடல்மொழியிலும் இனி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் கைது குறித்த கருத்துக்கு எதிர்ப்பு
சட்டமன்ற விவாதத்தின்போது சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்த கருத்துகளுக்கும் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மிசா காலத்தில் அப்போதைய திமுக தலைவர்கள் எதிர்கொண்ட அரச ஒடுக்குமுறைகள் குறித்து நாடு அறிந்த நிலையில், மு.க.ஸ்டாலின் கைது தொடர்பாக அமைச்சர் தெரிவித்த தகவல் வரலாற்றுப் பிழையானது என அவர் சாடியுள்ளார்.
எனவே, மு.க.ஸ்டாலின் கைது தொடர்பான கருத்தை அமைச்சர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: கூட்டணி குறித்து திட்டவட்டமாக அறிவித்த திருமாவளவன்! பரபரக்கும் அரசியல் களம்!!!