×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உதயநிதி 38, கனிமொழி 25.. மூத்த நிர்வாகிகளுக்காக பிளானை மாற்றிய ஸ்டாலின்! திமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு!!!

திமுகவில் 110 மாவட்டச் செயலாளர்கள் நியமனப் பட்டியல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த நிர்வாகிகளின் அதிருப்தியை தவிர்க்க பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறதாம்.

Advertisement

திமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான பட்டியல் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் அமைப்பை 110 மாவட்டங்களாக விரிவுபடுத்தி புதிய நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில், மூத்த நிர்வாகிகளின் அதிருப்தியைத் தவிர்க்க பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு ஆய்வில், கட்சிக்குள் நிலவும் பூசல்கள் மற்றும் நீண்ட காலமாக ஒரே நபர்கள் மாவட்டச் செயலாளர்களாகப் பதவி வகிப்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அதிகாரப் பகிர்வை அதிகரிக்கும் நோக்கில் 77 மாவட்டங்களாக இருந்த அமைப்பை 110 மாவட்டங்களாக உயர்த்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் தவெகவுக்கு ஸ்டாலின் வைக்கும் செக்! எதிர்ப்பார்பில் எகிறும் மக்கள்..!!!

உதயநிதி, கனிமொழி தரப்பில் பரிந்துரைகள்

புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்காக தயாரிக்கப்பட்ட பரிந்துரைப் பட்டியலில், உதயநிதி ஸ்டாலின் தரப்பிலிருந்து இளைஞரணியைச் சேர்ந்த 38 பேரின் பெயர்களும், கனிமொழி தரப்பிலிருந்து 25 ஆதரவாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. அஞ்சுகம் பூபதி, கோவி. செழியன், முத்துசெல்வம் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆனால், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரது பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நடவடிக்கையில் மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதினால், கட்சிக்குள் அதிருப்தி அதிகரிக்கலாம் என்ற கவலை தலைமைக்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூத்த நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்குச் செல்லாமல் தடுக்க முயற்சி?

பட்டியலை உடனடியாக வெளியிட்டால் அதிருப்தியடைந்த சில மூத்த நிர்வாகிகள் அதிமுக அல்லது தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளுக்குச் செல்லும் சூழல் உருவாகலாம் என திமுக தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் திமுக நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சித்து வரும் நிலையில், உட்கட்சிப் பிரச்சினைகள் பெரிதாகாமல் தடுப்பதில் தலைமை கவனம் செலுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்குவதுடன், கட்சியின் மூத்த நிர்வாகிகளின் அனுபவத்தையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலை திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பரிந்துரைப் பட்டியலில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, அனைத்துத் தரப்பினரையும் சமநிலைப்படுத்திய பிறகே புதிய மாவட்டச் செயலாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் ஆதிக்கத்தை தொடர அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திமுக மாவட்டச் செயலாளர்கள் #மு.க.ஸ்டாலின் #உதயநிதி ஸ்டாலின் #DMK Restructuring #கனிமொழி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story