×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீர் ட்விஸ்ட்... கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் தவெகவுக்கு ஸ்டாலின் வைக்கும் செக்! எதிர்ப்பார்பில் எகிறும் மக்கள்..!!!

கொளத்தூர் இடைத்தேர்தலில் மேயர் பிரியாவை வேட்பாளராக நிறுத்த ஸ்டாலின் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என திமுக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

கொளத்தூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு திமுகவில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை மேயர் பிரியாவை இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்த ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தவெக ஆட்சி அமைந்தது முதல் பிரியாவுக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கும் இந்த விவாதத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

மேயர் பிரியாவை வேட்பாளராக நிறுத்த திட்டமா?

தவெக அரசு அமைந்த காலம் முதலே மேயர் பிரியா மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே கருத்து மோதல்கள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில், கொளத்தூர் இடைத்தேர்தலில் பிரியாவை களமிறக்குவது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து கட்சித் தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: சட்டமன்றதுக்குள் ஸ்டாலின் நுழைவாரா..? பலத்தை நிரூபிக்குமா ஆளும் கட்சி..! கொளத்தூரில் நடக்கப்போவது என்ன? CM விஜய்யின் மாஸ்டர் மூவ்..!!!

ஸ்டாலின் மீண்டும் போட்டியிட மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்

இதற்கிடையே, கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே மீண்டும் போட்டியிட வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகத் தகவல் தெரிவிக்கிறது. தொகுதியின் அரசியல் நிலவரம் மற்றும் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, தலைவரே களமிறங்க வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் எதிர்பார்ப்பு

கொளத்தூர் இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து திமுகவில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. மேயர் பிரியா களமிறக்கப்படுவாரா அல்லது ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கட்சித் தலைமை எடுக்கவுள்ள இறுதி முடிவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் ஆதிக்கத்தை தொடர அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கொளத்தூர் இடைத்தேர்தல் #மேயர் பிரியா #மு.க.ஸ்டாலின் #dmk #TVK
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story