×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்க அப்பாவை எங்க காணோம்? வழக்கமான குடிக்கதை பாணியில் எதிர்க்கட்சி வாயை அடைக்க வைத்த CM விஜய்..!!!

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் குட்டிக்கதை மூலம் பதிலளித்தார். த.வெ.க அரசின் நிலைப்பாட்டையும் அவர் விளக்கினார்.

Advertisement

தமிழக சட்டமன்றத்தில் த.வெ.க மற்றும் தி.மு.க உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நிலவிய நிலையில், முதலமைச்சர் விஜய் தனது வழக்கமான குட்டிக்கதை பாணியில் பதிலளித்து அவையின் கவனத்தை ஈர்த்தார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் அளிப்பதற்குப் பதிலாக, ஒரு சிங்கத்தை மையமாகக் கொண்ட கதையின் மூலம் தனது கருத்தை அவர் வெளிப்படுத்தினார்.

சிங்கம் மற்றும் காட்டு விலங்குகள் கதை

அவையில் பேசிய முதலமைச்சர், ஒரு பெரிய காட்டில் புதிய சிங்கம் ராஜாவாக வந்ததாகவும், அது அமைதியாகவும் நிதானமாகவும் காட்டை நிர்வகித்து வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த நிலை சில பழைய விலங்குகளுக்கு பிடிக்காமல், சிங்கத்தைத் தொடர்ந்து வம்புக்கு இழுத்ததாக அவர் கதையைக் கூறினார்.

இதையும் படிங்க: உங்க 6 மாசம் பொறுமை இதுதானா? அதுக்குள்ள இப்போ ஏன் இப்படி துள்ளி குதிக்கிறீங்க.... செங்கோட்டையனின் காட்டமான கேள்வி..!!!

அப்போது ஒரு சிறிய விலங்கு, ஏன் பதிலடி கொடுக்கவில்லை என்று சிங்கத்திடம் கேட்கிறது. அதற்கு சிங்கம், தனது அமைதி பயத்தால் அல்ல என்றும், தனது பலம் என்ன என்பதைத் தெரிந்திருப்பதாகவும் பதிலளிக்கிறது. அவங்ககிட்ட போய் கேளு, உங்க அப்பாவே (முன்னாள் சிங்கம்) இப்போ காணோம்! நான் சின்சியரா வேலை செய்ய வந்துருக்கேன்.  தேவையற்ற சத்தங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை, தனது வேலையே முக்கியம் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்வதாக கதையை நிறைவு செய்தார்.

அரசியல் சூழலுடன் ஒப்பிட்ட விஜய்

கதையை முடித்த பின்னர், அதனை தற்போதைய அரசியல் சூழலுடன் இணைத்து முதலமைச்சர் விளக்கமளித்தார். தாங்கள் திடீரென ஆட்சிப் பொறுப்புக்கு வரவில்லை என்றும், நீண்ட கால உழைப்பு மற்றும் மக்கள் நம்பிக்கையின் மூலமே இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், மக்கள் நலனுக்காக த.வெ.க அரசு தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியையும் அவர் வெளிப்படுத்தினார். ஆட்சியின் கவனம் அரசியல் சலசலப்புகளில் அல்ல, மக்களின் தேவைகளில் இருக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் கூறினார்.

அமைதி என்பது பலவீனம் அல்ல

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஒவ்வொரு முறையும் பதில் அளிக்காமல் இருப்பது பயத்தால் அல்ல என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். மக்களால் வழங்கப்பட்ட பொறுப்பை நிதானமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார். தனது குட்டிக்கதை மூலம் அரசின் அணுகுமுறையையும், எதிர்க்கட்சிகளுக்கான அரசியல் பதிலையும் ஒரே நேரத்தில் விஜய் வெளிப்படுத்தியதாக அவை வட்டாரங்கள் கூறுகின்றன.

 

இதையும் படிங்க: 2017 டூ 2026 ஆட்சி.... ரைமிங்காக வசனம் பேசி சபையை அதிரவைத்த முதல்வர் விஜய்! பலமான பதிலடியால் திக்குமுக்கான திமுக...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#CM Vijay #தமிழக சட்டமன்றம் #TVK Government #எதிர்க்கட்சி விவாதம் #Assembly Debate
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story