உங்க 6 மாசம் பொறுமை இதுதானா? அதுக்குள்ள இப்போ ஏன் இப்படி துள்ளி குதிக்கிறீங்க.... செங்கோட்டையனின் காட்டமான கேள்வி..!!!
தவெக அரசு பதவியேற்று 15 நாட்களே ஆன நிலையில் எழும் விமர்சனங்களுக்கு கே.ஏ. செங்கோட்டையன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று இன்னும் 15 நாட்கள்கூட ஆகாத நிலையில், அரசுக்கு எதிராக எழுந்துவரும் விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. இந்த சூழலில், தவெக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக திமுக மற்றும் ஊடகங்களை நோக்கி அவர் எழுப்பிய கேள்விகள் கவனம் பெற்றுள்ளன.
“ஆறு மாதம் காத்திருப்போம் என்றவர்கள் இப்போது ஏன் அவசரம்?”
செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஆறு மாத காலம் எந்தவித விமர்சனமும் செய்யமாட்டோம் என்று சட்டமன்றத்தில் கூறியவர்கள் தற்போது சில நாட்களிலேயே கேள்வி எழுப்புவது ஏன் என்று சாடினார்.
“5 நாள், 10 நாள் ஆன உடனே இவ்வளவு அவசரமாக கேள்வி கேட்பது என்ன காரணம்?” என்று அவர் நேரடியாக எதிர்க்கட்சியை குறிவைத்து விமர்சித்தார். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: அந்த வீடியோவை எடுத்தது யார்..? இப்படி ஒரு வேலையை செய்தது விஜய்யா..? இல்ல செங்கோட்டையனா..? பகீர் கிளப்பிய டிடிவி தினகரன்..!!
ஊடகங்களையும் நோக்கி கேள்வி
அதன்பின் ஊடகங்களை நோக்கியும் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். “ஆறு மாதம் பொறுப்போம் என்று அவர்கள் கூறியதை நீங்கள்தானே செய்தியாக வெளியிட்டீர்கள். இப்போது 15 நாளுக்குள்ளாக ஏன் துள்ளி குதிக்கிறீர்கள் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அரசு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நேரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் கூறினார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தவெக அரசு குறித்து தொடர்ந்து எழுந்துவரும் விமர்சனங்களுக்கு செங்கோட்டையன் அளித்த இந்த பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அவரது பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.