×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குறை சொல்லாதீங்க.. ஒன்றிணைங்க.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி.!

SP Velumani: எதாவது ஒரு குறைசொல்லி கட்சியில் இருப்போரை நீக்குவது கூடாது என முன்னாள் அமைச்சர் சென்னையில் பேட்டி அளித்தார்.

Advertisement

அதிமுகவை ஒன்றிணைப்பதே எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோரின் நோக்கம் ஆகும்.

படுதோல்விகள்:

AIADMK: தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக, தொடர்ந்து அடுத்தடுத்த நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை எதிர்கொண்டது.

இதையும் படிங்க: VK Sasikala: புதிய கட்சியா? தம்பி கட்சியா? தமிழக அரசியலில் புதிய புயல்.. சசிகலாவின் முடிவு என்ன?

அமைச்சர் செங்கோட்டையன்:

இந்த விஷயத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அதிமுகவில் இருந்து விலகிய பலரும் திமுகவில் இணையத்தொடங்கினர். இதனை சரி செய்து கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருக்கிறார்.

ஆலோசனை:

இதனிடையே, 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப்பின்னர், தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சியை உறுதி செய்ய வேண்டும் என்ற குரலும், அதிமுகவில் இருந்து விலகிய பலரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற குரலும் எழத்தொடங்கி இருந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் தலைமையில் ரகசிய ஆலோசனையும் நடந்து வந்தது. 

எஸ்.பி. வேலுமணி பேச்சு:

இந்நிலையில், அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 27 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "அதிமுகவில் இருந்து விலகியவர்களை கட்சியின் பொதுச்செயலாளர் ஒருங்கிணைக்க முயற்சிக்க வேண்டும் என குரல் எழுப்பி இருக்கிறார். சசிகலா, டிடிவி ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலா தான். கட்சியில் இருப்போரை குறைசொல்லி வெளியே அனுப்பும் செயல்கள் கூடாது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்" என கூறினார்.

இதையும் படிங்க: மொத்தமாக உடைந்த அதிமுக! எல்லாத்துக்கும் காரணம் எடப்பாடி தான்.... சி.வி.சண்முகம் தலைமையில் புதிய அணி! யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி திருப்பம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #SP Velumani Edappadi Palanisamy #அதிமுக #சிவி சண்முகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story