மொத்தமாக உடைந்த அதிமுக! எல்லாத்துக்கும் காரணம் எடப்பாடி தான்.... சி.வி.சண்முகம் தலைமையில் புதிய அணி! யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி திருப்பம்!!!
2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புதிய அணி உருவாகியுள்ளதால் கட்சிக்குள் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த மோசமான தோல்வி, கட்சிக்குள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்த அதிமுகவில் தற்போது தலைமைக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன.
தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் எழுந்துள்ள நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து நீக்கப்படப்போகும் சி.வி.சண்முகம்.. எஸ்.பி.வேலுமணி.?! வெடித்த மோதல்.?!
38 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றதாக தகவல்
நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்து மோதலுக்குப் பிறகு, சென்னை எம்.ஆர்.சி நகரில் சி.வி.சண்முகம் தலைமையில் தனி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 38 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றதாக வெளியாகியுள்ள தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி மற்றும் துணைத் தலைவராக சி.வி.சண்முகத்தை நியமிக்க வேண்டும் என ஆதரவு கடிதங்கள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமையே நேரடி சவாலை சந்தித்து வருகிறது.
சமாதான முயற்சியில் எடப்பாடி தரப்பு
நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, சேலம் இளங்கோவன் மற்றும் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சமரச பேச்சுவார்த்தைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. “சண்முகம் கூறும் கருத்துகளை கேட்க தயாராக இருக்கிறோம்” என எடப்பாடி தரப்பு சமரச சிக்னல் கொடுத்தாலும், அதிருப்தி அணியினர் அதற்கு உடன்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளும் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் பிளவை நோக்கும் அதிமுக?
ஓபிஎஸ் பிரிவினைக்கு பிறகு ஏற்கனவே பலவீனமடைந்திருந்த அதிமுக, தற்போது மீண்டும் பிளவை நோக்கிச் செல்கிறது என்ற கவலை தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது. தேர்தல் தோல்வி, வேட்பாளர் தேர்வு, கூட்டணி முடிவுகள் ஆகிய அனைத்திலும் தலைமையின் செயல்பாடே காரணம் என அதிருப்தி அணியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், எடப்பாடி பழனிசாமி தலைமையின் எதிர்காலத்தையும், அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் பயணத்தையும் தீர்மானிக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிட்டு வருகின்றன.
இதையும் படிங்க: அழியப்போகும் அதிமுக கட்சி...? எடப்பாடியை ஓரங்கட்டும் மாஜிக்கள்! சிவி சண்முகம் செய்யும் தில்லாங்கடி வேலையால்.... தலையை ஆட்டும் அமைச்சர்கள்!