×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

VK Sasikala: புதிய கட்சியா? தம்பி கட்சியா? தமிழக அரசியலில் புதிய புயல்.. சசிகலாவின் முடிவு என்ன?

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் (TN Elections 2026) பணிகளை கருத்தில் கொண்டு வி.கே. சசிகலா (VK Sasikala) விரைவில் முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

துரோகிகளுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palaniswami) திட்டவட்டமாக தெரிவித்து வருவதால், சசிகலா முக்கிய முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் நடந்த உட்கட்சி பிரச்சனை காரணமாக, அக்கட்சி பல அணிகளாக உடைந்து இருந்தது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இதனிடையே, டி.டி.வி. தினகரன் பாஜக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கும் - அமமுகவுக்கும் இடையேயான பிரச்சனை அண்ணன்-தம்பி இடையே நடந்தது. திமுகவை வீழ்த்த நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என கூறினார். இது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பி இருந்தது.

சசிகலாவின் முடிவு என்ன?

டி.டி.வி. தினகரனின் முடிவால் அதிருப்தியடைந்த சசிகலா, தனது ஆதரவாளர்களை தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தனது சகோதரர் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கட்சியில் இணைந்து பணியாற்றலாமா? அல்லது டி.டி.வி. ஆதரவு கருத்தை ஏற்றுக்கொள்ளலாமா? அல்லது புதிய கட்சியை தொடங்கலாமா? என்ற ஆலோசனையில் ஆதரவாளர்களுடன் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சசிகலா எடுக்கும் முடிவை பொறுத்து டி.டி.வி. தினகரனின் வாக்கும் மாறும் என்பதால், இது தமிழக அரசியலில் அடுத்த புயலை கிளப்பி இருக்கிறது. 

இதையும் படிங்க: வரும் 27ம் தேதி திடீர் திருப்பம்! தவெகவில் இணைய போகும் கே.ஏ. செங்கோட்டையன்...! அரசியலில் புதிய அதிர்வலைகள்...!

செல்வாக்கு சரியும் நிலை:

2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது விஜயின் தவெகவில் தனது அரசியல் பயணத்தை புதிய பாதையில் தொடங்கி இருக்கிறார். டி.டி.வி. தினகரனின் முடிவால் ஒருசிலர் திமுக பக்கம் சென்றுவிட்டனர். தனியாக தவித்து வரும் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும் திமுக, அதிமுக பக்கம் செல்ல தொடங்கியுள்ளனர். இதனிடையே, சசிகலாவின் முடிவு தமிழக அரசியலை மீண்டும் பரபரப்பில் தள்ளி இருக்கிறது.

சமீபத்திய நிகழ்வுகளால் கொள்கை உணர்வுடன் உழைத்து வந்த பலரும் அதிருப்தியடைந்து இருப்பதால், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு ஒருசில ஏற்ற-இறக்கத்தை தரலாம் எனவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பிப்ரவரி 08ம் தேதி முடிவை அறிவித்துவிட்டு, ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப். 24ம் தேதி சசிகலா தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AIADMK #sasikala #TN politics #TN Elections 2026 #விகே சசிகலா #அதிமுக #தமிழக அரசியல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story