×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இடைத்தேர்தலை எதிர்கொள்ள இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதிரடி உத்தரவால் அனல் பரக்கும் அரசியல்...!!!

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மூத்த நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருகிறது. இதற்காக விரிவான தேர்தல் பணிக்குழுவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மதுராந்தகத்தில் முனுசாமி; 

​​​​​​அதன்படி, மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பணிகளை தலைமைக் கழகச் செயலாளர் K.P. முனுசாமி முன்னின்று கவனிப்பார். தாராபுரம் தொகுதி பணிகளுக்கு கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: மும்முனை போட்டி...! புதிய அரசியல் பாதையில் களத்தில் இறங்கிய பழைய வேட்பாளர்கள்.... அதிமுக-வுக்கு கடும் சவால்! மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக- வின் திட்டவட்ட கணக்கு...! அதிரும் அரசியல் களம்...!!!

தொகுதி அளவில் தேர்தல் பணிகளை வேகப்படுத்துவதுடன், வாக்காளர்களை சந்திப்பது, பிரசாரத்தை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட களப்பணிகளை தீவிரப்படுத்துவதே இந்த நியமனங்களின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக தேர்தல் பணிகள் இரு தொகுதிகளிலும் விரைவில் முழு வீச்சில் தொடங்க உள்ளன.

தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

மூத்த தலைவர்களுடன் இணைந்து கட்சித் தொண்டர்களும், விரைவில் அறிவிக்கப்பட உள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் இறங்கி, கட்சியின் வெற்றிக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூத்த நிர்வாகிகளின் நேரடி கண்காணிப்பில் பணிகள் நடைபெற உள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுகவின் தேர்தல் நடவடிக்கைகள் தற்போதே வேகம் பெறத் தொடங்கியுள்ளன. இடைத்தேர்தல் களம் அடுத்தடுத்த நாட்களில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: நாங்களும் தவெக- வுக்கு எதிரி தான்! கூட்டணி குறித்து எடப்பாடி சொன்ன அந்த ஒரு வார்த்தை.... அப்போ ஒன்றுகூடி ஒரு அணியிலா? இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#அதிமுக #எடப்பாடி பழனிசாமி #மதுராந்தகம் இடைத்தேர்தல் #தாராபுரம் Bypoll #K.P.முனுசாமி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story