×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மும்முனை போட்டி...! புதிய அரசியல் பாதையில் களத்தில் இறங்கிய பழைய வேட்பாளர்கள்.... அதிமுக-வுக்கு கடும் சவால்! மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக- வின் திட்டவட்ட கணக்கு...! அதிரும் அரசியல் களம்...!!!

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அரசியல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது. தவெக, அதிமுக, திமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Advertisement

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காலியான தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் தமிழக வெற்றிக் கழகம், தொகுதிகளை தக்கவைக்க தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது. மறுபுறம், அதிமுக தனது பழைய கோட்டையை மீட்கவும், திமுக தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கவும் களமிறங்கியுள்ளது.

மீண்டும் களத்தில் இறங்கிய முன்னாள் அதிமுக வேட்பாளர்கள்

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் தற்போது தவெகவில் இணைந்துள்ள நிலையில், அவர்களையே மீண்டும் வேட்பாளர்களாக அக்கட்சி அறிவித்துள்ளது. முதல்வர் விஜய்யின் நேரடி பிரசாரமும், இருவருக்கும் உள்ள தனிப்பட்ட செல்வாக்கும் வெற்றிக்கு கைகொடுக்கும் என தவெக தரப்பு நம்புகிறது.

இதையும் படிங்க: நாங்களும் தவெக- வுக்கு எதிரி தான்! கூட்டணி குறித்து எடப்பாடி சொன்ன அந்த ஒரு வார்த்தை.... அப்போ ஒன்றுகூடி ஒரு அணியிலா? இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே...!!!

கோட்டையை மீட்க அதிமுகவுக்கு கடும் சவால்

அதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத அளவுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் சரிவுக்கு மத்தியில், பாரம்பரியமாக தங்கள் செல்வாக்கு இருந்த இரு தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். கட்சி மாறியவர்களுக்கு மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னிறுத்தி, தொண்டர்களையும் வாக்காளர்களையும் ஒருங்கிணைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

திமுகவின் கணக்கு என்ன?

திமுகவும் இந்த இடைத்தேர்தலை முக்கிய அரசியல் வாய்ப்பாக கருதுகிறது. மதுராந்தகத்தில் பரந்தாமனையும், தாராபுரத்தில் சுகன்யாவையும் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ள அக்கட்சி, ஏற்கனவே தொகுதிகளில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. திமுக வெற்றி பெற்றால், புதிய ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை வெளிப்படுத்த முடியும் என்பதுடன், அதிமுகவை அரசியல் களத்தில் மேலும் பின்னுக்குத் தள்ளியதாகவும் பிரசாரம் செய்ய முடியும் என அக்கட்சி கணக்கிடுகிறது.

இதனால் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் மூன்று கட்சிகளுக்கும் வெவ்வேறு காரணங்களால் முக்கியமானதாக மாறியுள்ளது. ஆளுங்கட்சியின் செல்வாக்கை இடைத்தேர்தல் மூலம் நிரூபிக்க தவெக முயற்சிக்கிறது. அதிமுக தனது அரசியல் அடித்தளத்தை காப்பாற்ற போராடுகிறது. திமுகவோ புதிய ஆட்சிக்கு எதிரான மனநிலையை வாக்குகளாக மாற்றும் முனைப்பில் உள்ளது. இறுதியில் யாருக்கு வெற்றி என்பதை வாக்காளர்களின் தீர்ப்பே தீர்மானிக்க உள்ளது.

 

இதையும் படிங்க: தேர்தல் அறிவிப்பு வந்த மறுநாளே ஆட்டத்தை ஆட ஆரம்பித்த அதிமுக! களத்தில் எடப்பாடி காட்டும் அதிவேகம்... திணறும் திமுக! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#இடைத்தேர்தல் #TVK #அதிமுக #திமுக #தாராபுரம் மதுராந்தகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story